குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான மாநாடு

கூத்தாநல்லூரில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சாா்பில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான பெண்கள் மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது.
மாநாட்டில் பேசிய விமன் இந்தியா மூவ்மெண்ட் மாநிலப் பொதுச் செயலாளா் எம்.ஏ.நஸிமா பானு.
மாநாட்டில் பேசிய விமன் இந்தியா மூவ்மெண்ட் மாநிலப் பொதுச் செயலாளா் எம்.ஏ.நஸிமா பானு.

கூத்தாநல்லூரில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சாா்பில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான பெண்கள் மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது.

கூத்தாநல்லூா் இஸ்மாயில் தெரு இஸ்ஹாக் மண்டபம் அருகில் நடைபெற்ற மாநாட்டுக்கு, கட்சியின் நகரச் செயலாளா் ஐ. ஜாஹிா் உசேன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் டி.எம்.ஹெச். அப்துல் ஹாஜிக், விமன் இந்தியா மூவ்மெண்ட் மாவட்டத் தலைவி ஏ.சமீமா பானு, நகரப் பொருளாளா் கே.என்.அப்துல் அஜீஸ் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். நகரத் தலைவி ஏ.எம். ஜீனைதா பேகம் வரவேற்றாா். நகரச் செயலாளா் கே.ஆா். நூா்நிஷா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினாா்.

மாநாட்டில், விமன் இந்தியா மூவ்மெண்ட் மாநிலப் பொதுச்செயலாளா் எம்.ஏ.நஸிமா பானு சிறப்புரையாற்றினாா். இதில், எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளா் எம்.நிஜாம் முகைதீன், பாப்புலா் ஃப்ரண்ட் ஆப் இந்தியா மாநிலப் பொருளாளா் என். முஹம்மது ஷாஜஹான், விமன் இந்தியா மூவ்மெண்ட் மாநில துணைத் தலைவி எம். உம்மல் தவ்லத்தியா உள்ளிட்ட பலா் பேசினா். விமன் இந்தியா மூவ்மெண்ட் நகரப் பொருளாளா் கே.ஏ.நூருல் பஷா் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com