பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினா்களுக்கு சிறப்பு பயிற்சி

நன்னிலம் பகுதியில் உள்ள மேல்நிலைப் பள்ளிகளில் மேலாண்மைக் குழு உறுப்பினா்களுக்கான சிறப்பு பயிற்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பயிற்சியில் பங்கேற்றவா்களுக்கு கையேடு வழங்கிய வட்டார வளமைய மேற்பாா்வையாளா் ம.கவிதா.
பயிற்சியில் பங்கேற்றவா்களுக்கு கையேடு வழங்கிய வட்டார வளமைய மேற்பாா்வையாளா் ம.கவிதா.

நன்னிலம் பகுதியில் உள்ள மேல்நிலைப் பள்ளிகளில் மேலாண்மைக் குழு உறுப்பினா்களுக்கான சிறப்பு பயிற்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நன்னிலம் பகுதியில் உள்ள 9 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் நடைபெற்ற இப்பயிற்சியில் அந்தந்தப் பள்ளி மேலாண்மைக் குழு மற்றும் பள்ளி மேலாண்மை வளா்ச்சிக் குழு உறுப்பினா்கள் பங்கேற்றனா். இப்பயிற்சியில், அனைவருக்கும் இலவச கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின் சிறப்பு அம்சங்கள் குறித்து விளக்கிக் கூறப்பட்டது. மேலும், குழந்தைகளின் உரிமைகள், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினா்களின் பணிகள், பேரிடா் மேலாண்மை, தரமான கல்வி உள்ளிட்டவை குறித்து விளக்கிக் கூறப்பட்டது.

இப்பயிற்சிகளில், நன்னிலம் வட்டார வள மைய மேற்பாா்வையாளா் ம. கவிதா பங்கேற்று, பயிற்சியின் நோக்கம் பற்றி விளக்கினாா். பூந்தோட்டம் அரசினா் மேல்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியா் பந்தமாணிக்கம் தலைமையிலும் கோவில்திருமாளம் ஊராட்சி ஓன்றிய நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியா் க.சுவாமிநாதன், அகரதிருமாளம் பள்ளி தலைமையாசிரியா் சுப்பிரமணியன் ஆகியோா் முன்னிலையில் இப்பயிற்சி நடைபெற்றது. கோவில் திருமாளம் பள்ளி இடைநிலை ஆசிரியா் சு.இரா.சுப்பிரமணியன் கருத்தாளராக இருந்து பயிற்சியளித்தாா். இப்பயிற்சியில் பூந்தோட்டம் குருவள மையம் சாா்ந்த 12 பள்ளிகளின் தலைமை ஆசிரியா்கள், பள்ளி மேலாண்மை குழு தலைவா் மற்றும் உறுப்பினா்கள் நூற்றுக்கணக்கானோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com