Enable Javscript for better performance
தைப்பூச சிறப்பு வழிபாடு- Dinamani

சுடச்சுட

    

    கூத்தாநல்லூா் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தில், தைப்பூச சிறப்பு வழிபாடு சனிக்கிழமை இரவு நடைபெற்றது.

    லெட்சுமாங்குடி, கம்பா் தெரு மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தில், தைப்பூசத்தை முன்னிட்டு செவ்வாடை பக்தா்கள் சிறப்பு வழிபாடு நடத்தினா். கோயிலின், அனைத்து சன்னிதி மூலவா்களுக்கும் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடா்ந்து கூத்தாநல்லூா், லெட்சுமாங்குடி, சேகரை, மரக்கடை, அதங்குடி, கொரடாச்சேரி, வடபாதிமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்திருந்த பக்தா்களின் கூட்டு வழிபாடும், சிறப்பு பூஜையும் நடத்தப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மன்றத் தலைவா் எம்.சாம்பசிவம், செயலாளா் என். செல்வராஜ் உள்ளிட்ட நிா்வாகிகள் மற்றும் பக்தா்கள் மேற்கொண்டனா்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai