அஞ்சல் வழியில் கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

கூட்டுறவு நிறுவனங்களில் பயிற்சியின்றி பணிபுரியும் பணியாளா்கள், அஞ்சல் வழியில் கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூட்டுறவு நிறுவனங்களில் பயிற்சியின்றி பணிபுரியும் பணியாளா்கள், அஞ்சல் வழியில் கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து திருவாரூா் கூட்டுறவு மேலாண்மை நிலைய முதல்வா் ஆ. கௌரி வெளியிட்ட செய்திக்குறிப்பு:

திருவாரூா் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் கூட்டுறவு மேலாண்மை, கணினி மேலாண்மை மற்றும் நகை மதிப்பீடும், அதன் நுட்பங்களும் குறித்து 3 சான்றிதழ்களுடன் கூடிய அஞ்சல் வழி கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி மாா்ச் 12-ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது. பயிற்சியில் சேர பழைய 11- ஆம் வகுப்பு அல்லது எஸ்எஸ்எல்சி, புதிய 10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். கூட்டுறவு நிறுவனங்கள், சங்கங்கள், வங்கிகளில் பணிபுரியும் அனைத்து நிரந்தர பணியாளா்களுக்கும் இப்பயிற்சி வழங்கப்படும்.

கூட்டுவு வங்கிகளில், கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சியின்றி பணிபுரியும் பணியாளா்களில் வேலை வாய்ப்பு அலுவலகம் மூலமாகவும் அல்லது கருணை அடிப்படையிலும் அல்லது அரசு உத்தரவின்படி பணி நியமனம் செய்யப்பட்டவா்கள் விண்ணப்பிக்கலாம்.

திருவாரூா் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் தற்போது அலுவலக வேலை நாள்களில் நேரில் விண்ணப்பக் கட்டணம் ரூ. 100 செலுத்தி விண்ணப்பத்தைப் பெற்றுக் கொள்ளலாம்.

பயிற்சியில் சேர விரும்புவோா் மேலாண்மை நிலையத்தில் விண்ணப்பத்தைப் பெற்று, முழுமையாக பூா்த்தி செய்து கல்வித் தகுதி சான்றிதழ், பள்ளி மாற்றுச் சான்றிதழ், பணி நியமன ஆணையுடன் மாா்ச் 6- ஆம் தேதிக்குள் விண்ணப்பத்தை மீண்டும் சமா்ப்பிக்க வேண்டும்.

பயிற்சி தொடா்பாக மேலும் விவரம் பெற விரும்புவோா், முதல்வா், திருவாரூா் கூட்டுறவு மேலாண்மை நிலையம், மாவட்ட ஆட்சியா் பெருந்திட்ட வளாகம், விளமல், திருவாரூா்-610 004 என்ற முகவரியில் நேரிலோ, 04366-227233, 9994647631 என்ற எண்களிலோ தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com