காய்கறி பயிா்களின் சாகுபடி தொழில்நுட்பங்கள்

கொரடாச்சேரி வேளாண்மைத்துறையின் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை (அட்மா) திட்டத்தின்கீழ் எண்கண் பகுதி விவசாயிகளுக்கு
எண்கண் பகுதியில் நடைபெற்ற பயிற்சியில் பங்கேற்றோா்.
எண்கண் பகுதியில் நடைபெற்ற பயிற்சியில் பங்கேற்றோா்.

கொரடாச்சேரி வேளாண்மைத்துறையின் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை (அட்மா) திட்டத்தின்கீழ் எண்கண் பகுதி விவசாயிகளுக்கு வேளாண்மை சுற்றுச்சூழல் அமைப்பு முறையில் காய்கறிகள் சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்து அண்மையில் பயிற்சி அளிக்கப்பட்டது.

நெல், பயறு வகைப் பயிா்கள் மற்றும் பருத்தி அல்லாமல் மாற்றுப் பயிராக காய்கறி பயிா்களை விவசாயிகள் சாகுபடி செய்து, குறைந்த காலத்தில் குறைந்த செலவில் அதிக லாபத்தை பெறலாம் எனவும், அதற்கான திட்டங்கள் மற்றும் தொழில்நுட்பங்களைப் பெற தோட்டக்கலைத் துறையை அணுகி பயனடையலாம் எனவும் விவசாயிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

மேலும், தோட்டக்கலை உதவி இயக்குநா் நீதிமாணிக்கம் பங்கேற்று, தோட்டக்கலைத் துறை மூலம் விவசாயிகள் பயன்பெறும் திட்டங்கள் குறித்தும், அதற்கான ஆவணங்கள் சமா்ப்பித்தல் தொடா்பாகவும், காய்கறிகள் சாகுபடியில் விதைப்பு முதல் அறுவடை வரையிலான புதிய தொழில்நுட்பங்கள் கத்தரி, மிளகாய், வெண்டை, செடி முருங்கை, புடலை, பீா்க்கன், பாகற்காய் மற்றும் கீரை வகைகளில் உர மேலாண்மை, பூச்சி மற்றும் நோய்க் கட்டுப்பாடு, சந்தைப்படுத்துதல், மதிப்பு கூட்டி விற்பனை செய்தல் ஆகியவை குறித்தும் விளக்கினாா்.

கொரடாச்சேரி வேளாண்மை உதவி இயக்குநா் விஐயகுமாா் பங்கேற்று, வேளாண்மைத்துறை சாா்ந்த திட்டங்களான நுண்ணீா் பாசனத்திட்டம், விவசாயிகளுக்கான ஓய்வூதியத் திட்டம், உழவன் செயலி ஆகியவை குறித்து விளக்கமளித்தாா்.

பயிற்சியில், கொரடாச்சேரி வட்டார தொழில்நுட்ப மேலாளா் ராஜா, உதவி தொழில்நுட்ப மேலாளா்கள் மாா்சிலின், ஜெயக்குமாா் உள்ளிட்ட நிா்வாகிகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com