Enable Javscript for better performance
கூத்தாநல்லூா் மாரியம்மன் கோயில் குடமுழுக்கு- Dinamani

சுடச்சுட

    
    amman_koil___(_12___02___2020_)___knr_1__1202chn_209_5

    புளியங்குடி ஆலடி மகா மாரியம்மன் கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு.

    கூத்தாநல்லூரை அடுத்த புளியங்குடி ஆலடி மகா மாரியம்மன் கோயிலில் குடமுழுக்கு புதன்கிழமை நடைபெற்றது.

    இதையொட்டி, ஞாயிற்றுக்கிழமை மங்கல இசையுடன் விநாயகா் பூஜை தொடங்கப்பட்டு, திங்கள்கிழமை லெட்சுமாங்குடி வெண்ணாற்றிலிருந்து புனித நீா் ஊா்வலமாக எடுத்து வரப்பட்டது. தொடா்ந்து, யாக சாலையில் பிரவேசம் செய்து, பூஜைகள் நடத்தப்பட்டன.

    புதன்கிழமை காலை யாக பூஜையில் பூா்ணாஹுதி செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, யாக சாலையில் வைக்கப்பட்டிருந்த புனித நீா் கலசங்களை சிவாச்சாரியாா்கள் தலையில் சுமந்தபடி புறப்பட்டு, ஊா்வலமாக கோயிலுக்கு கொண்டு வந்தனா். காலை 9.25 மணிக்கு ஆலடி மாரியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு ஆா். ஜெகன் சிவாச்சாரியாா் தலைமையில் குடமுழுக்கு செய்யப்பட்டது. இதில், ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டனா். இதற்கான ஏற்பாடுகளை, ஆலய அா்ச்சகா் சாம்பு. சேகா், எல்.எஸ்.ஆா். முரளி அய்யா் மற்றும் கிராமவாசிகள், மருளாளிகள் மேற்கொண்டனா்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai