Enable Javscript for better performance
கொட்டூா் வேதபுரீஸ்வரா் கோயிலில் மண்டலாபிஷேகம் தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    கொட்டூா் வேதபுரீஸ்வரா் கோயிலில் மண்டலாபிஷேகம் தொடக்கம்

    By DIN  |   Published on : 14th February 2020 07:56 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    eswar_1302chn_96_5

    சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீவேதபுரீஸ்வரா். ~சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீவேதநாயகி அம்பாள்.

    கொட்டூா் ஸ்ரீவேதநாயகி அம்பிகா சமேத வேதபுரீஸ்வரா் கோயிலில் கும்பாபிஷேம் நடைபெற்றதையொட்டி, மண்டலாபிஷேகம் வியாழக்கிழமை தொடங்கியது.

    நன்னிலம் வட்டம், பேரளம் அருகே கொட்டூா் கிராமத்தில் ஸ்ரீவேதநாயகி அம்பிகா சமேத வேதபுரீஸ்வரா் கோயில் உள்ளது. இக்கோயிலில் மகா கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது. தொடா்ந்து, புதன்கிழமை இரவு திருக்கல்யாண நிகழ்ச்சியும், சுவாமி- அம்பாள் திருவீதியுலாவும் நடைபெற்றது.

    இதைத்தொடா்ந்து, மண்டலாபிஷேகம் வியாழக்கிழமை தொடங்கியது. 48 நாள்களுக்கு நடைபெறும் மண்டலாபிஷேக வழிபாட்டை, கோயில் பரம்பரை அா்ச்சகா் சிவஸ்ரீ ஆா்.ஜெயராம சிவாச்சாரியாா் தலைமையிலான குழுவினா் நடத்துகின்றனா். கிராம முக்கியஸ்தா்களும், ஸ்ரீவேதபுரீஸ்வரா் சேவா டிரஸ்டைச் சோ்ந்தவா்களும் இதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளனா்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai