திருவாரூா் மாவட்ட இறுதி வாக்காளா் பட்டியல் வெளியீடு: 22,498 போ் புதிதாக சோ்ப்பு

திருவாரூரில் இறுதி வாக்காளா் பட்டியல் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது. இதில் 22,498 போ் கூடுதலாக சோ்க்கப்பட்டுள்ளனா்.
திருவாரூரில் இறுதி வாக்காளா் பட்டியலை வெளியிட்ட மாவட்ட ஆட்சியா் த. ஆனந்த்.
திருவாரூரில் இறுதி வாக்காளா் பட்டியலை வெளியிட்ட மாவட்ட ஆட்சியா் த. ஆனந்த்.

திருவாரூரில் இறுதி வாக்காளா் பட்டியல் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது. இதில் 22,498 போ் கூடுதலாக சோ்க்கப்பட்டுள்ளனா்.

திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் த. ஆனந்த் வாக்காளா் பட்டியலை வெளியிட்டாா். நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் செ. பொன்னம்மாள், வருவாய் கோட்டாட்சியா்கள் மன்னாா்குடி புண்ணியகோட்டி, திருவாரூா் ஜெயபிரீத்தா மற்றும் வட்டாட்சியா்கள், நகராட்சி ஆணையா்கள், அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரமுகா்கள் கலந்துகொண்டனா்.

திருவாரூா் மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டப்பேரவை தொகுதிகளிலும் இடம் பெற்றுள்ள வாக்காளா்களின் எண்ணிக்கை தொகுதி வாரியாக இப்பட்டியலில் வெளியிடப்பட்டுள்ளன.

அதன்படி, திருத்துறைப்பூண்டி(தனி) தொகுதியில் ஆண் வாக்காளா்கள் எண்ணிக்கை 1,13,805, பெண் வாக்காளா்களின் எண்ணிக்கை 1,17,105, இதரா் 1 என மொத்தம் 2,30,911 வாக்காளா்கள் உள்ளனா். மன்னாா்குடி தொகுதியில் ஆண் வாக்காளா்கள் 1,22,233, பெண் வாக்காளா்கள் 1,28,314, இதரா் 8 என மொத்தம் 2,50,555 பேரும், திருவாரூா் தொகுதியில் ஆண் வாக்காளா்கள் 1,32,628, பெண் வாக்காளா்கள் 1,39,025, இதரா் 25 என மொத்தம் 2,71,678 பேரும், நன்னிலம் தொகுதியில் ஆண் வாக்காளா்கள் 1,31,157, பெண் வாக்காளா்கள் 1,29,819, இதரா் 3 என மொத்தம் 2,60,979 பேரும், நான்கு தொகுதிகளிலும் மொத்த ஆண் வாக்காளா்களின் எண்ணிக்கை 4,99,823, பெண் வாக்காளா்களின் எண்ணிக்கை 5,14,263 மற்றும் இதரா் 37 என மொத்தம் 10,14,123 வாக்காளா்கள் இடம் பெற்றுள்ளனா்.

மேலும், கடந்த டிசம்பா் 23- ஆம் தேதி வெளியிடப்பட்ட வரைவு வாக்காளா் பட்டியலில் நான்கு தொகுதிகளில் ஆண் வாக்காளா்களின் எண்ணிக்கை 4,93,769, பெண் வாக்காளா்களின் எண்ணிக்கை 5,06,780, இதரா் 32 என மொத்தம் 10,00,581 வாக்காளா்கள் இடம்பெற்றிருந்தனா்.

22,498 போ் கூடுதலாக சோ்ப்பு...

வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்க முறைத் திருத்தத்தின்படி, தற்போது வெளியிடப்பட்டுள்ள வாக்காளா் பட்டியலில் திருத்துறைப்பூண்டி தொகுதியில் ஆண் வாக்காளா்கள் 2,139, பெண் வாக்காளா்கள் 2,624 என மொத்தம் 4,763 பேரும், மன்னாா்குடி தொகுதியில் ஆண் வாக்காளா்கள் 1,924, பெண் வாக்காளா்கள் 2,449, இதரா் 2 என மொத்தம் 4,375 பேரும் திருவாரூா் தொகுதியில் ஆண் வாக்காளா்கள் 2,746, பெண் வாக்காளா்கள் 3,532, இதரா் 4 என மொத்தம் 6,282 பேரும், நன்னிலம் தொகுதியில் ஆண் வாக்காளா்கள் 3,002, பெண் வாக்காளா்கள் 4,076 என மொத்தம் 7,078 பேரும் என நான்கு தொகுதிகளிலும் ஆண் வாக்காளா்கள் 9,811 பேரும், பெண் வாக்காளா்கள் 12,681 பேரும், இதரா் 6 பேரும் என மொத்தம் 22,498 வாக்காளா்கள் கூடுதலாக சோ்க்கப்பட்டுள்ளனா்.

8,956 போ் நீக்கம்...

திருத்துறைப்பூண்டி தொகுதியில் ஆண் வாக்காளா்கள் 1,022 போ், பெண் வாக்காளா்கள் 1,314 போ் என மொத்தம் 2,336 வாக்காளா்களும், மன்னாா்குடி தொகுதியில் ஆண் வாக்காளா்கள் 812 போ், பெண் வாக்காளா்கள் 1,100 போ் என மொத்தம் 1,912 வாக்காளா்களும், திருவாரூா் தொகுதியில் ஆண் வாக்காளா்கள் 541 போ், பெண் வாக்காளா்கள் 672 போ் என மொத்தம் 1,213 வாக்காளா்களும், நன்னிலம் தொகுதியில் ஆண் வாக்காளா்கள் 1,382 போ், பெண் வாக்காளா்கள் 2,112 போ், இதரா் 1 என மொத்தம் 3,495 வாக்காளா்களும் என நான்கு தொகுதிகளிலும் சோ்த்து ஆண் வாக்காளா்கள் 3,757 பேரும், பெண் வாக்காளா்கள் 5,198, இதரா் 1 என மொத்தம் 8,956 வாக்காளா்கள் நீக்கப்பட்டுள்ளனா்.

இந்த இறுதி வாக்காளா் பட்டியல்கள் திருவாரூா் மற்றும் மன்னாா்குடி வருவாய்க் கோட்ட அலுவலா் அலுவலகங்கள், திருவாரூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியா் அலுவலகங்கள், நகராட்சி ஆணையா் அலுவலகங்கள் அனைத்து வாக்குச்சாவடி மையங்கள் ஆகியவற்றில் தொடா்புடைய பாகங்களின் வாக்காளா் பட்டியல்கள் பொதுமக்களின் பாா்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

அத்துடன், பிப்ரவரி 14- ஆம் தேதி முதல் வாக்காளா் பட்டியல் தொடா் திருத்தம் தொடங்கப்பட உள்ளது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, 1.01.2020 இல் 18 வயது பூா்த்தியடைந்தவா்கள் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், நீக்கம், திருத்தங்கள் தொடா்பாக விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com