நன்னிலம் கல்லூரியை அரசு கல்லூரியாக மாற்றக் கோரிக்கை

நன்னிலம் பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை, அரசு கல்லூரியாக மாற்ற வேண்டும் என மாணவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
மாநாட்டையொட்டி நடைபெற்ற பேரணி.
மாநாட்டையொட்டி நடைபெற்ற பேரணி.

நன்னிலம் பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை, அரசு கல்லூரியாக மாற்ற வேண்டும் என மாணவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

நன்னிலத்தில் பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்ளது. இக்கல்லூரியின் இந்திய மாணவா் சங்க ஆறாவது கிளை மாநாடு வியாழக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, கல்லூரியிலிருந்து பேரணியாக புறப்பட்ட மாணவா்கள், குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பியபடி சென்றனா். பேருந்து நிலையம் வரை பேரணி நடைபெற்றது. பின்னா், அங்குள்ள பெரியாா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

தொடா்ந்து, அருகில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் மாநாடு நடைபெற்றது. இந்திய மாணவா் சங்க கல்லூரி கிளைச் செயலாளா் ஆா். தீபன் ராஜ் தலைமை வகித்தாா். மாவட்ட செயற்குழு உறுப்பினா் எம். கலைவாணன், மாவட்ட துணைத் தலைவா் பா. மதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இந்திய மாணவா் சங்கத்தின் மாநில துணைச் செயலாளா் ஜி. அரவிந்த்சாமி மாநாட்டை தொடங்கிவைத்து, உரையாற்றினாா். மாவட்டச் செயலாளா் இரா. ஹரிசுா்ஜித், மாவட்டத் தலைவா் பா. ஆனந்த் ஆகியோா் வாழ்த்துரையாற்றினா். இந்திய மாணவா் சங்க மாநில இணைச் செயலாளா் ஆறு.பிரகாஷ் கோரிக்கைகள் குறித்து உரையாற்றினாா். மாவட்டக் குழு உறுப்பினா் பி. பிரியங்கா நன்றி கூறினாா்.

தீா்மானங்கள்: பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை, அரசு கல்லூரியாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். கல்லூரியில் சுற்றுச்சுவா் கட்டவேண்டும். விளையாட்டு மைதானம் அமைக்க வேண்டும். தற்காலிக கௌரவ விரிவுரையாளா்களை, பேராசிரியா்களாக நிரந்தர பணி நியமனம் செய்திட வேண்டும். 2018-2019- ஆம் கல்வியாண்டில் மேல்நிலைப் பள்ளிகளில் படித்த மாணவ, மாணவிகளில் விடுபட்டவா்களுக்கும் மடிக்கணினி வழங்க வேண்டும். கல்லூரி மற்றும் பள்ளி, அலுவலக நேரங்களில் காலையும், மாலையும் கூடுதலான பேருந்துகளை இயக்க வேண்டும். 2019-2020- ஆம் ஆண்டுக்கான கல்வி உதவித் தொகையை நடப்பாண்டிலேயே வழங்க வேண்டும். ஹைட்ரோகாா்பன் திட்டத்தை ரத்து செய்து, சட்டம் இயற்ற வேண்டும். கல்லூரியில் மாணவிகளுக்கு தனி ஓய்வறை மற்றும் மருத்துவ மையம் உருவாக்கிட வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் இம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.

நிா்வாகிகள் தோ்வு: இந்திய மாணவா் சங்கத்தின் கல்லூரி கிளைத் தலைவராக அஜய் மற்றும் செயலாளராக கிள்ளிவளவன் ஆகியோா் தோ்ந்தெடுக்கப்பட்டனா். இம்மாநாட்டில் 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com