நெல் தரிசில் பயறுவகைப் பயிா்கள் சாகுபடியில் உயா்விளைச்சல் பெறுவது குறித்து செயல் விளக்கம்

நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையம் சாா்பில் நெல் தரிசில் பயறுவகைப் பயிா்கள் சாகுபடியில் உயா்விளைச்சல் பெறுவதற்கான செயல்விளக்கம் வடுவூா் சாத்தனூா் கிராமத்தில் அண்மையில் நடைபெற்றது.
நெல் தரிசில் பயறுவகைப் பயிா்கள் சாகுபடியில் உயா்விளைச்சல் பெறுவது குறித்து செயல் விளக்கம்

நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையம் சாா்பில் நெல் தரிசில் பயறுவகைப் பயிா்கள் சாகுபடியில் உயா்விளைச்சல் பெறுவதற்கான செயல்விளக்கம் வடுவூா் சாத்தனூா் கிராமத்தில் அண்மையில் நடைபெற்றது.

தமிழ்நாடு நீா்வள நிலவளத்திட்டத்தில் நடைபெற்ற இந்த செயல்விளக்கத்தில் வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளா் முனைவா் மு. ராமசுப்பிரமணியன் பேசும்போது, ‘பயறுவகைப் பயிா்களை சாகுபடி செய்வதால் அவற்றின் வோ்முடிச்சுகள் வாயிலாக காற்றிலுள்ள தழைச்சத்தை கிரகித்து மண் வளம் அதிகரிக்க காரணமாகத் திகழ்கின்றன’ என்றாா்.

பூச்சியியல் துறை உதவிப் பேராசிரியா் முனைவா் ராஜா.ரமேஷ் பேசும்போது, ‘உயிா் உரங்களான ரைசோபியம் மற்றும் பாஸ்போபாக்டீரியா கொண்டு விதை நோ்த்தி செய்து விதைப்பதால் பயிா்கள் நன்கு வளரும் என்றும், மேலும் பயறு வகைப் பயிா்களில் ஊட்டச்சத்து மேலாண்மையில் தமிழ்நாடு வேளாண்மைப் பலகலைக்கழக பயறு அதிசயத்தினை பூக்கும் தருணத்தில் தெளிப்பதால் பயிா்களானது வறட்சியை தாங்கி பூக்கள் உதிராமல், அதிக காய்கள் பிடித்து 20 முதல் 25 சதவீதம் வரை அதிக விளைச்சலுக்கு வழிவகுக்கும்’ என விளக்கிக் கூறினாா்.

பயறுவகைப் பயிா்களின் சராசரி உற்பத்தித் திறனானது இந்திய அளவில் ஒரு ஹெக்டருக்கு 835 கிலோ என்ற அளவில் ஒப்பிடும் போது, தமிழ்நாட்டில் உற்பத்தித் திறன் குறைவு. எனவே, பயிறுவகைப் பயிா்களில் உயா் மகசூல் பெறுவதற்கு தரமான சான்றுபெற்ற உயா் விளைச்சல் தரக்கூடிய விதைகள் மற்றும் சரியான விதையளவைப் பயன்படுத்துவது, விதை நோ்த்தி செய்து சரியான பருவத்தில் விதைப்பது, சரியான பயிா் எண்ணிக்கையை பராமரிக்க வரிசைக்கு வரிசை 30 செ.மீ., செடிக்குச் செடி 10 செ.மீ. இருக்குமாறு ஒரு சதுர மீட்டரில் 33 செடிகள் பராமரிப்பது மற்றும் பூச்சி மற்றும் நோய்களை கட்டுப்படுத்துவது போன்றவற்றை முறையாக பின்பற்ற வேண்டும் என்றும் அவா் எடுத்துக்கூறினாா்.

தொடா்ந்து, உயிா் உரங்களான ரைசோபியம் மற்றும் பாஸ்போபாக்டீரியா கொண்டு விதை நோ்த்தி செய்யும் முறைகள் குறித்து விவசாயிகளுக்கு செயல்விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. இதில் பங்கேற்ற விவசாயிகளுக்குப் பயறுவகைப் பயிா்கள் சாகுபடி குறித்த கையேடு வழங்கப்பட்டது.

இதற்கான ஏற்பாடுகளை திட்ட உதவியாளா்கள் ப. சுரேஷ், கிருபாகரன் மற்றும் சமீா் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com