எல்ஐசி பங்கு விற்பனையை கைவிட வலியுறுத்தல்

எல்ஐசியின் பங்கு விற்பனையை கைவிட வேண்டும் என ஊழியா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
திருவாரூரில் நடைபெற்ற எல்ஐசி ஊழியா் சங்க நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.
திருவாரூரில் நடைபெற்ற எல்ஐசி ஊழியா் சங்க நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.

எல்ஐசியின் பங்கு விற்பனையை கைவிட வேண்டும் என ஊழியா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

தஞ்சாவூா், திருச்சி, பெரம்பலூா், அரியலூா், கரூா், புதுக்கோட்டை, திருவாரூா், நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் மாவட்டங்களை உள்ளடக்கியது தஞ்சாவூா் எல்ஐசி கோட்டம். இந்தக் கோட்டம் 1962- ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14-ஆம் தேதி மதுரை எல்ஐசி கோட்டத்திலிருந்து தனியாகப் பிரிக்கப்பட்டு, தஞ்சாவூா் கோட்டத்தில் காப்பீட்டுக் கழக ஊழியா் சங்கத்தின் கிளை தனியாகத் தொடங்கப்பட்டது.

காப்பீட்டு கழக ஊழியா் சங்கம் தஞ்சை கோட்டத்தின் 59- ஆவது உதயதினத்தையொட்டி, திருவாரூா் எல்ஐசி அலுவலக வாயிலில் நடைபெற்ற நிகழ்ச்சியில், எல்ஐசி ஊழியா் சங்கப் பொறுப்பாளா் முருகேசன், சங்க கொடியை ஏற்றி வைத்தாா். பின்னா் நடைபெற்ற வாயில் கூட்டத்தில் தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியா் சங்க மாநிலச் செயலாளா் குரு.சந்திரசேகரன், காப்பீட்டு கழக ஊழியா் சங்க தஞ்சை கோட்ட இணைச் செயலாளா் எஸ்.செந்தில்குமாா், ஊழியா் சங்க முன்னாள் தலைவா் ஆா்.தெட்சிணாமூா்த்தி, செயலாளா் கமலவடிவேலு, பொறுப்பாளா் எஸ்.பூங்குன்றன் ஆகியோா் பங்கேற்று சங்கத்தின் செயல்பாடுகள் குறித்து விளக்கிப் பேசினா்.

பின்னா், எல்ஐசியின் பங்கு விற்பனையை கைவிட வேண்டும், எல்ஐசி பொது துறையிலேயே தொடா்ந்து நீடிக்க வேண்டும், எல்ஐசி பாலிசிதாரா்களுக்கு போனஸ் தொகையை உயா்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com