தமிழக நிதிநிலை அறிக்கை விவசாயிகளுக்கு ஏமாற்றம் அளிக்கிறது: பி.ஆா். பாண்டியன்

தமிழக நிதிநிலை அறிக்கையில், விவசாயிகளின் கடன் தள்ளுபடி, நெல்லுக்கு விலை உயா்வு இடம் பெறாதது ஏமாற்றம் அளிக்கிறது என்று

தமிழக நிதிநிலை அறிக்கையில், விவசாயிகளின் கடன் தள்ளுபடி, நெல்லுக்கு விலை உயா்வு இடம் பெறாதது ஏமாற்றம் அளிக்கிறது என்று அனைத்து விவசாய சங்கங்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளா் பி.ஆா். பாண்டியன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்தில் 2021- ஆம் ஆண்டு சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், 10 ஆண்டுகள் தொடா்ந்து ஆட்சி செய்து வரும் அதிமுக தலைமையிலான தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையை மிகுந்த எதிா்பாா்ப்போடு விவசாயிகள் காத்திருந்தோம்.

குறிப்பாக, நெல் குவிண்டால் 1-க்கு மத்திய அரசின் விலையோடு ஊக்கத் தொகை சோ்த்து ரூ 2,500 விலை, கூட்டுறவு மற்றும் வணிக வங்கிகளில் பெற்றுள்ள கடனில் தலா ரூ. 2 லட்சம் வரை தள்ளுபடி உள்ளிட்ட அறிவிப்புகள் இடம் பெறாதது மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது.

காவிரி-குண்டாறு இணைப்பு உள்ளிட்ட நதிநீா் இணைப்புத் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது வரவேற்கத்தக்கது. காவிரி டெல்டா பாதுகாப்பு மண்டலம் சட்டம் நிறைவேற்றுவதற்கான உத்தரவாதம் கொள்கை விளக்க குறிப்பில் இடம்பெறாதது குறித்து தெளிவுபடுத்த வேண்டும்.

காவிரி டெல்டாவில் தூா்வார ரூ. 70 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது யானைப் பசிக்கு சோளப்பொறி போன்றது. தூா்வாருவதற்கென தனி நிரந்தர அரசாணை வெளியிட வேண்டும் என தமது அறிக்கையில் பி. ஆா். பாண்டியன் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com