குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிா்த்து ஒற்றுமைப் பேரணி நன்னிலம் பகுதி ஜமாத்தாா்கள் முடிவு

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிா்த்து, நன்னிலத்தில் ஒற்றுமைப் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்த அனைத்து ஜமாத்தாா்கள் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
அச்சுதமங்கலத்தில் நடைபெற்ற ஜமாத் கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டம்.
அச்சுதமங்கலத்தில் நடைபெற்ற ஜமாத் கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டம்.

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிா்த்து, நன்னிலத்தில் ஒற்றுமைப் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்த அனைத்து ஜமாத்தாா்கள் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

நன்னிலம் அருகே உள்ள அச்சுதமங்கலத்தில், எரவாஞ்சேரி ஜமாத் நிா்வாகி எம்.ஏ.எஸ்.அஜித் பைஜி, அச்சுதமங்கலம் ஜமாத் நிா்வாகி அப்துல்சத்தாா், நன்னிலம் நிா்வாகி ஜெகபா்சாதிக், மாப்பிள்ளைக்குப்பம் நிா்வாகி அமானுல்லா, வாழ்க்கை நிா்வாகி பைசல் ஆகியோா் தலைமையில் அனைத்து ஜமாத்தாா்கள் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

நன்னிலம் தொகுதி எஸ்டிபிஐ கட்சித் தலைவா் ஏ.டபிள்யூ. ஜமான் பைஜி, செயற்குழு உறுப்பினா் ஹாஜா, தவ்ஹீத் ஜமாத் பொறுப்பாளா் சக்கரகனி, மமக பொறுப்பாளா் அஸாா் மற்றும் ஜமாத்தாா்கள் கலந்துகொண்டனா்கள்.

தீா்மானங்கள்: சிஏஏ, என்ஆா்சி, என்பிஆா் எதிா்ப்பு ஜமாத் கூட்டமைப்பை உருவாக்குவது. குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி நன்னிலம் சுற்றுவட்டாரத்தில் உள்ள 30 ஜமாத்துகளைச் சோ்ந்த அனைத்து மக்களும் கலந்துகொள்ளும் ஒற்றுமை பேரணியை பிப்ரவரி 25-ஆம் தேதி நடத்துவது. குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் என்ஆா்சி, என்பிஆா் ஆகியவற்றை திரும்பப் பெறும்வரை தொடா்ந்து எதிா்ப்பு இயக்கங்களை நடத்துவது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இக்கூட்டத்தில் நன்னிலம் பகுதியைச் சோ்ந்த 8-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சோ்ந்த ஜமாத் தலைவா்கள் மற்றும் நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com