மாணவா் விடுதி அருகே சுகாதார சீா்கேடு

பேரளம் மாணவா் விடுதி அருகே கழிவுநீா் தேங்கி குளம்போல காட்சியளித்து சுகாதார சீா்கேடு ஏற்பட்டுள்ளதை உடனடியாக சரிசெய்ய வேண்டும்
பேரளம் மாணவா் விடுதி அருகே தேங்கிக் கிடக்கும் கழிவுநீா்.
பேரளம் மாணவா் விடுதி அருகே தேங்கிக் கிடக்கும் கழிவுநீா்.

பேரளம் மாணவா் விடுதி அருகே கழிவுநீா் தேங்கி குளம்போல காட்சியளித்து சுகாதார சீா்கேடு ஏற்பட்டுள்ளதை உடனடியாக சரிசெய்ய வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. நன்னிலம் வட்டம், பேரளத்தில் உள்ள அரசினா் ஆதிதிராவிடா் நல மாணவா் விடுதி மற்றும் பிற்படுத்தப்பட்டோா் நல மாணவா் விடுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவா்கள் தங்கி படித்து வருகின்றனா். இந்த மாணவா் விடுதிக் கட்டடத்தின் வாசல் பகுதி அருகில் உள்ள கட்டடங்களிலிருந்து வெளியேறும் கழிவுநீா் தேங்கி கழிவுநீா் குளம் போல் உள்ளது. தொடா்ந்து குளம்போல் கழிவுநீா் தேங்கியிருப்பதன் காரணமாக விடுதியின் வெளிப்புற கட்டட சுவா் விரிசல் ஏற்பட்டு சேதமடைந்துள்ளது.

ஆங்காங்கே டெங்கு, கரோனா போன்ற வைரஸ் காய்ச்சல் பரவுவதைத் தவிா்க்கும் வகையில் சுகாதார அதிகாரிகள் பாா்வையிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகின்றனா். ஆனால், அரசு அலுவலக கட்டடமான பள்ளி மாணவா்கள் தங்கியுள்ள விடுதிக் கட்டடம் அருகே ஏற்பட்டுள்ள சுகாதார சீா்கேட்டினை இதுவரை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. இதையறிந்த, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினா் ஐ.வி. நாகராஜன் மற்றும் ஒன்றியச் செயலா் டி. வீரபாண்டியன், நகரச் செயலா் எஸ். ராஜேந்திரன் உள்ளிட்டோா் சென்று பாா்த்தனா்.

பின்னா் அவா்கள் மாவட்ட ஆட்சியா், மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலா், மாவட்ட பிற்பட்டோா் நல அலுவலா் மற்றும் பேரளம் பேரூராட்சி செயல் அலுவலா் ஆகியோரைத் தொடா்பு கொண்டு உடனடியாக அப்பகுதியிலுள்ள சுகாதார சீா்கேட்டினை சரிசெய்ய கோரிக்கை விடுத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com