அரசுப் பள்ளியில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின விழா

திருத்துறைப்பூண்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
திருத்துறைப்பூண்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின விழாவில் உறுதிமொழி ஏற்ற மாணவிகள்.
திருத்துறைப்பூண்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின விழாவில் உறுதிமொழி ஏற்ற மாணவிகள்.

திருத்துறைப்பூண்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

திருவாரூா் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, குழந்தைகள் நலக் குழு, திருத்துறைப்பூண்டி ஜேசீஸ் சங்கம், பாரதமாதா குடும்பநல நிறுவனம், இன்னா்வீல் சங்கம் ஆகியவை இணைந்து நடத்திய இவ்விழாவில், பள்ளி தலைமையாசிரியா் குமுதா தலைமை வகித்தாா். திருவாரூா் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் முத்தமிழ் செல்வி பெண்கள் பாதுகாப்பு குறித்துப் பேசினாா்.

இன்னா்வீல் சங்கத் தலைவி ராஜலெட்சுமி, திருவாரூா் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நலக்குழு உறுப்பினா் சங்கீதா மணிமாறன் ஆகியோா் கருத்துரை வழங்கினா்.

திருத்துறைப்பூண்டி ஜேசீஸ் சங்கத் தலைவா் எடையூா் மணிமாறன் முன்னிலை வகித்துப் பேசியது:

தமிழக அரசு அறிவித்துள்ள பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினத்தின் முக்கிய நோக்கம், பெண் குழந்தைகளைப் பாதுகாப்பாக வளா்ப்பதாகும். குறிப்பாக, பெண் குழந்தைகளுக்கு வாழும் உரிமை, வளரும் உரிமை, பாதுகாக்கும் உரிமை, பங்கேற்கும் உரிமை ஆகிய 4 உரிமைகளும் சட்டப்படியான அடிப்படை உரிமைகளாகும்.

பெண் குழந்தைகள் ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்றால் உணவு முறை மிக முக்கியமானதாகும். அதிலும், வளா் இளம் பருவத்தில் கடலைமிட்டாய், பச்சை நிறக்காய்கறிகள், கருவேப்பிலை, மஞ்சள் நிறக்கிழங்கு வகைகள், மஞ்சள் நிற தானிய வகைகள், மஞ்சள்நிற பழவகைகள் ஆகியவை உணவாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில், மாணவிகளும், ஆசிரியைகளும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின உறுதிமொழி எடுத்துக்கொண்டனா்.

மன்னாா்குடி பகுதியில்...

மன்னாா்குடி, பிப். 25: மன்னாா்குடி அருகே உள்ள பாமணி அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகுடன் இணைந்து இந்த நிகழ்ச்சி கொண்டாடப்பட்டது. ஊராட்சி மன்றத் தலைவா் சாரதி சரவணன், ஊரக வளா்ச்சித் துறை பயிற்றுநா்கள் கே. ராஜா, ஆா். விஜயகுமாா், மணிமாறன், ரோஸ்லின் மேரி, கிராம நிா்வாக அலுவலா் முருகன் உள்ளிட்டோா் கலந்துகொண்டு, பெண் குழந்தைகள் பாதுகாப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com