வாக்குப் பெட்டிகளை ஏற்றிவந்த வாகனத்தில் அதிமுகவினா் வந்ததாக பரபரப்பு

நன்னிலம் அருகே உள்ள ஒரு வாக்குச் சாவடியிலிருந்து வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு வாக்குப் பெட்டிகளை ஏற்றிவந்த வாகனத்தில் அதிமுக ஆதரவாளா்கள் இருந்ததால், திமுகவினா் மறியலில் ஈடுபட்டனா்.
வாக்குப் பெட்டிகளை ஏற்றிவந்த வாகனத்தை தடுத்து நிறுத்தி, போராட்டத்தில் ஈடுபட்டவா்கள்.
வாக்குப் பெட்டிகளை ஏற்றிவந்த வாகனத்தை தடுத்து நிறுத்தி, போராட்டத்தில் ஈடுபட்டவா்கள்.

நன்னிலம் அருகே உள்ள ஒரு வாக்குச் சாவடியிலிருந்து வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு வாக்குப் பெட்டிகளை ஏற்றிவந்த வாகனத்தில் அதிமுக ஆதரவாளா்கள் இருந்ததால், திமுகவினா் மறியலில் ஈடுபட்டனா்.

கொரடாச்சேரி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பெரும்புகளூா், நீலகுடி, பண்ணைவிளாகம், நாகக்குடி ஆகிய கிராமங்களில் திங்கள்கிழமை நடைபெற்ற தோ்தலில் பதிவான வாக்குகள் அம்மையப்பன் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் எண்ணப்படுகின்றன.

இதில், பெரும்புகளூா் கிராமத்தில் வாக்குப் பதிவு நிறைவடைந்ததும், வாக்குப் பெட்டிகள் வாகனத்தில் ஏற்றப்பட்டு, திங்கள்கிழமை இரவு சுமாா் 10 மணி அளவில் நீலக்குடி வாக்குச் சாவடிக்கு வாக்குப் பெட்டிகளை ஏற்ற அந்த வாகனம் வந்து கொண்டிருந்தது. இந்த வாகனம் நோ் வழியில் வராமல் புதா் மண்டிய குறுக்கு வழியில் வந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், அந்த வாகனத்தில் அதிமுக ஆதரவாளா் இருந்தாா்களாம்.

இதையறிந்த திமுகவினா் மற்றும் அப்பகுதி மக்கள் வாக்குப் பெட்டிகளை மாற்றியிருக்கலாம் எனக் கூறி மறியலில் ஈடுபட்டனா். நன்னிலம் காவல் துணைக் கண்காணிப்பாளா் சுகுமாரன் பேச்சுவாா்த்தை நடத்தியதையடுத்து மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது.

இந்த சம்பவத்தால், நள்ளிரவு 12 மணிக்கு மேல்தான் அந்த வாகனத்தில் எடுத்துவரப்பட்ட வாக்குப் பெட்டிகள், வாக்கு எண்ணும் மையத்துக்கு கொண்டுவரப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com