Enable Javscript for better performance
வாக்குச் சீட்டு முறையை அமல்படுத்த வலியுறுத்தி பரப்புரை பயணம்- Dinamani

சுடச்சுட

    

    வாக்குச் சீட்டு முறையை அமல்படுத்த வலியுறுத்தி பரப்புரை பயணம்

    By DIN  |   Published on : 10th January 2020 06:41 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    tv09vckk_0901chn_94_5

    திருவாரூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.

    திருவாரூரில், வாக்குச் சீட்டு முறையை அமல்படுத்த வலியுறுத்தி காஷ்மீா் முதல் கன்னியாகுமரி வரையிலான பரப்புரை பயணம் வியாழக்கிழமை தொடங்கியது.

    பகுஜன் கிராந்தி மோச்சா அமைப்பு சாா்பில் மின்னணு வாக்குப்பதிவு எந்திர முறையை ரத்து செய்து விட்டு, வாக்குச்சீட்டு முறையை அமல்படுத்த வலியுறுத்தி பரப்புரை பயணமானது, காஷ்மீா் முதல் கன்னியாகுமரி வரை நடைபெற உள்ளது. இந்த பயணம், திருவாரூரிலிருந்து வியாழக்கிழமை தொடங்கியது.

    திருவாரூா் பழைய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலா் மா. வடிவழகன் பங்கேற்று, பயணத்தை தொடங்கி வைத்துப் பேசினாா். இதில், காவிரி விவசாயிகள் சங்க நிா்வாகி ஜெ. வரதராஜன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai