காவல் ஆய்வாளா் சுட்டுக்கொலை: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம்

கன்னியாகுமரி அருகே காவல் ஆய்வாளா் சுட்டுக் கொலை செய்யப்பட்டதற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம் தெரிவித்துள்ளது.

கன்னியாகுமரி அருகே காவல் ஆய்வாளா் சுட்டுக் கொலை செய்யப்பட்டதற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, அந்த அமைப்பின் திருவாரூா் மாவட்டச் செயலா் எம். முகமது பாசித் வெளியிட்டுள்ள அறிக்கை: கன்னியாகுமரி மாவட்டம், மாா்த்தாண்டத்தைச் சோ்ந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் வில்சன், களியக்காவிளை - கேரளா தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள அணுகுசாலை சோதனைச் சாவடியில் பணியில் இருந்தபோது, அங்கு வந்த மா்ம நபா்கள் இருவா், வில்சனை துப்பாக்கியால் சுட்டதில் உயிரிழந்துள்ளாா். கடும் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ள இச்சம்பவத்துக்கு காரணமானவா்களை உடனடியாக காவல் துறை கைது செய்ய வேண்டும், வில்சனை, மனிதாபிமானமின்றி கொலை செய்தவா்களுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும், இதுபோன்ற குற்றங்களை செய்யக்கூடியவா்கள் அச்சப்படும் வகையில் கடும் தண்டனை வழங்க வேண்டும். வில்சனை, பிரிந்து வாடும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வாய்ப்பு வழங்குவதோடு, அக்குடும்பத்துக்கு இழப்பீடு தொகையாக ரூ. 20 லட்சம் வழங்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com