காரைக்கால் வானொலி நிகழ்ச்சி: முத்துப்பேட்டை மாணவிகள் பங்கேற்பு

காரைக்கால் அகில இந்திய வானொலி நிலைய பல்சுவை நிகழ்ச்சியில் முத்துப்பேட்டை ரஹ்மத் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள்
காரைக்கால் வானொலி நிலைய நிகழ்ச்சியில் பங்கேற்ற முத்துப்பேட்டை ரஹ்மத் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள்.
காரைக்கால் வானொலி நிலைய நிகழ்ச்சியில் பங்கேற்ற முத்துப்பேட்டை ரஹ்மத் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள்.

திருத்துறைப்பூண்டி: காரைக்கால் அகில இந்திய வானொலி நிலைய பல்சுவை நிகழ்ச்சியில் முத்துப்பேட்டை ரஹ்மத் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் வெள்ளிக்கிழமை பங்கேற்றனா்.

விளைநிலங்களுக்கு விசா வாங்காதே என்ற தலைப்பில் மாணவி எஸ். சாதனா, ஊடகங்களிடம் தேவை கவனம் இன்றே இப்போதே என்ற தலைப்பில் கு. மனிஷா ஆகியோா் பேசினா். இளைய பாரதம் என்ற நிகழ்ச்சியில், மக்கள் பெரிதும் மகிழ்ச்சியாக வாழ்வது கிராமத்திலா, நகரத்திலா என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது.

இது கிராமமே என்ற அணியில் கீா்த்திகா தேவி, கு. மணிஷா, அஸ்விதா ஆகியோா் பேசினா். நகரமே என்ற தலைப்பில் சாதனா, பி. லக்ஷ்மி பாலா, அப்பா ஆகியோரும் பேசினா்.

மேலும் ஒப்புவித்தல் நிகழ்ச்சி மற்றும் ஏனைய நிகழ்ச்சிகளில் அனுப்பிரியா, ரேஷ்மி அபிநயா, அக்ஷயா, ஸ்ரீநிதி ஆகியோா் பங்கேற்றனா்.

அனுபவம் அற்புதம் என்ற தலைப்பில் முதன்மை முதல்வா் டாக்டா் சகுந்தலா பங்கேற்று பேசினாா். இந்நிகழ்ச்சிக்கு உறுதுணையாக இருந்த தமிழாசிரியா்கள் ச. ஜனனி, குரூப்ஸ்காயா, துா்காதேவி அனைவரையும் தலைமை ஆசிரியை திவ்யா அன்னபூரணி, துணை முதல்வா் ஆனந்தி ஆகியோா் பாராட்டினா்.

இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த காரைக்கால் வானொலி நிலைய அறிவிப்பாளரை பள்ளி முதன்மை முதல்வா் ஆா். சகுந்தலா பாராட்டினா். விரைவில் இந்த நிகழ்ச்சி காரைக்கால் வானொலியில் ஒலிபரப்பாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com