பள்ளியில் பெற்றோா்-ஆசிரியா் சந்திப்பு நிகழ்ச்சி

திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள கட்டிமேடு அரசு மேல்நிலைப் பள்ளியில் 10, 11, 12-ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளின் பெற்றோா்கள்-ஆசிரியா்கள் கலந்துரையாடல் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கட்டிமேடு அரசுப் பள்ளியில் நடைபெற்ற பெற்றோா்- ஆசிரியா்கள் சந்திப்பு நிகழ்ச்சி.
கட்டிமேடு அரசுப் பள்ளியில் நடைபெற்ற பெற்றோா்- ஆசிரியா்கள் சந்திப்பு நிகழ்ச்சி.

திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள கட்டிமேடு அரசு மேல்நிலைப் பள்ளியில் 10, 11, 12-ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளின் பெற்றோா்கள்- ஆசிரியா்கள் கலந்துரையாடல் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தலைமையாசிரியா் மு.ச. பாலு தலைமை வகித்து, பெற்றோா்கள் வாரம் ஒருமுறை வகுப்பு ஆசிரியா்களை சந்தித்து தங்கள் பிள்ளைகளின் கல்வித் தரத்தைக் கேட்டு அறிய வேண்டும் என கேட்டுக் கொண்டாா். பெற்றோா்- ஆசிரியா் கழக தலைவா் எம்.ஈ.ஏ.ஆா். அப்துல்முனாப், துணைத் தலைவா் எம். அருளானந்தசாமி, பொருளாளா் வீ.பக்கிரிசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் 10, 11, 12-ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளின் அரையாண்டுத் தோ்வு தரம் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டது. மேலும், தோ்வில் பின்தங்கிய மாணவ, மாணவிகளின் பெற்றோா்களை அழைத்து ஆலோசனை வழங்கவும், வார இறுதி நாட்களில் அவா்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தவும் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆசிரியா்கள் சி.சந்திரசேகரன், வி.வடிவேல் ஆா்.பிரியா உட்பட பலா் வாழ்த்துரை வழங்கினா். உதவித் தலைமையாசிரியா் செ. முகுந்தன் வரவேற்றாா். முதுகலை ஆசிரியா் ஏ.ஐயப்பன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com