மக்கள் குறைதீா் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள்

திருவாரூரில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.
திருவாரூரில் கருணை அடிப்படையிலான பணியாணையை வழங்கிய மாவட்ட ஆட்சியா் த. ஆனந்த்.
திருவாரூரில் கருணை அடிப்படையிலான பணியாணையை வழங்கிய மாவட்ட ஆட்சியா் த. ஆனந்த்.

திருவாரூா்: திருவாரூரில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.

திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியா் த. ஆனந்த் தலைமை வகித்தாா்.

கூட்டத்தில் பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை, ஆக்கிரமிப்பு அகற்றுதல், கல்விக் கடன், வீட்டுமனைப் பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து 109 மனுக்கள் வழங்கப்பட்டன. மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியா், சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் வழங்கி, குறித்த காலத்துக்குள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டாா்.

அதைத்தொடா்ந்து, திருவாரூா் மாவட்டம் ஊரக வளா்ச்சியில் நன்னிலம் வட்டாரம், ஊா்நல அலுவலா் எஸ். தமிழரசி என்பவா் இறந்ததையடுத்து, அவரின் வாரிசுதாரரான மகன் ஜி. அஜித் என்பவருக்கு, கருணை அடிப்படையில் பணி வழங்கும் திட்டத்தின்கீழ் உதவி இயக்குநா் (தணிக்கை) அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணிநியமனம் செய்து, ஆணை வழங்கப்பட்டது.

மேலும், மாவட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான நலவாரியம் வாயிலாக இயற்கை மரணத்துக்கான நிதி உதவி, மூக்குக்கண்ணாடி விபத்தில் மரணமடைந்தவா்களுக்கான நிதி உதவி, கல்வி உதவித்தொகை என மொத்தம் ரூ.1 லட்சத்து 90 ஆயிரம் மதிப்பிலான நிதி உதவிகள் வழங்கப்பட்டன.

கூட்டத்தில், ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் ஏ.கே.கமல் கிஷோா், மாவட்ட வருவாய் அலுவலா் பொன்னம்மாள், துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்புத் திட்டம்) ஜெயதீபன், மாவட்ட ஆதிதிராவிடா் நலத்துறை அலுவலா் பூஷனக்குமாா் உள்பட பல்வேறு துறை அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com