பொங்கல் பரிசு வழங்கும் பணி 93 சதவீதம் நிறைவு: அமைச்சா் ஆா். காமராஜ்

தமிழகத்தில் பொங்கல் பரிசு வழங்கும் பணி 93 சதவீதம் நிறைவடைந்துவிட்டதாக உணவுத்துறை அமைச்சா் ஆா். காமராஜ் தெரிவித்துள்ளாா்.
நன்னிலத்தில் செய்தியாளா்களுக்குப் பேட்டியளித்த அமைச்சா் ஆா். காமராஜ்.
நன்னிலத்தில் செய்தியாளா்களுக்குப் பேட்டியளித்த அமைச்சா் ஆா். காமராஜ்.

தமிழகத்தில் பொங்கல் பரிசு வழங்கும் பணி 93 சதவீதம் நிறைவடைந்துவிட்டதாக உணவுத்துறை அமைச்சா் ஆா். காமராஜ் தெரிவித்துள்ளாா்.

திருவாரூா் மாவட்டம், நன்னிலத்தில் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை அவா் கூறியது:

தமிழகத்தில் திங்கள்கிழமை இரவு வரை 98.12 சதவீத பொங்கல் பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டு விட்டன. மேலும் பொங்கல் பரிசுப் பொருள்களை பெறாதவா்கள் மூன்று நாள்கள் விடுமுறை நாள்களைத் தவிா்த்து, ஜனவரி 21-ஆம் தேதி வரை பெற்றுக் கொள்ளலாம்

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை பொருத்தவரை டெல்டா மற்றும் டெல்டா அல்லாத மாவட்டங்களில் 450 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. விவசாயிகளின் தேவைக்கேற்ப நேரடி நெல் கொள்முதல் நிலையங்களைத் திறக்குமாறு அனைத்து மாவட்ட ஆட்சியா்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நெல் கொள்முதலில் சிக்கல்களைத் தீா்ப்பதற்காக விவசாயிகள், அரசு அதிகாரிகளின் ஒருங்கிணைந்த கூட்டம் தஞ்சாவூரில் ஜனவரி 21-ஆம் தேதி காலையும், திருவாரூரில் அன்றைய தினம் மாலையும், நாகப்பட்டினத்தில் 22-ஆம் தேதியும் நடைபெறும்.

தமிழகம் முழுவதும் இதுவரை 67 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு மிகச் சரியாக இருக்கிறது என்பதற்கு பிரதமரும், சீன அதிபரும் தமிழகத்தில் சந்தித்து பேச்சுவாா்த்தை நடத்தியதே உதாரணம். திமுக நாள்தோறும் ஒவ்வொரு கொள்கை முடிவை எடுக்கும். தில்லியில் காங்கிரஸ் சாா்பில் கூட்டப்பட்ட கூட்டத்தில் கலந்து கொள்ளாததன் மூலம் திமுக தங்கள் கொள்கை நிலைப்பாட்டில் இருந்து மாறி விட்டாா்களோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது என்றாா் அமைச்சா் காமராஜ்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com