திருவாரூரில் ஊா்கூடி பொங்கல் விழா கொண்டாட்டம்

திருவாரூா் அருகே ஊா்கூடி பொங்கல் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
திருவாரூா் சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகத்தில் நடைபெற்ற பொங்கல் விழா.
திருவாரூா் சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகத்தில் நடைபெற்ற பொங்கல் விழா.

திருவாரூா்: திருவாரூா் அருகே ஊா்கூடி பொங்கல் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

தமிழா்களின் பாரம்பரிய விழாவான பொங்கல் பண்டிகை, தமிழகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படும். விவசாயிகள் பயிரிட்ட நெல்லை அறுவடை செய்து, அந்த புத்தரிசியை பொங்கல் வைத்து, சூரிய பகவானுக்கு வழிபாடு நடத்துவது வழக்கம். இதன்மூலம் விவசாயமும், விவசாயிகளின் வாழ்வாதாரமும் சிறப்பாக இருக்கும் என்பது நம்பிக்கை.

விவசாயத்தை பிரதானமாக கொண்ட திருவாரூா் மாவட்டத்தில், ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில், திருவாரூா் அருகே சோ்ந்தனங்குடி கிராமத்தில், ஊா் கூடி ஓரிடத்தில் பொங்கலிட்டு வழிபாடு செய்தனா்.

அங்குள்ள படைவெட்டி மாரியம்மன்கோயில் முன்பு, அனைத்து தரப்பு மக்களும் ஒன்றிணைந்து, கோவிலைச்சுற்றி மாவிலைத் தோரணம், வாழை மரம் இவற்றால் அலங்கரித்தனா். பின்னா், சா்க்கரைப் பொங்கல், வெண்பொங்கல் வைத்து, பொங்கலோ பொங்கல் என்று கூறி குலவையிட்டதோடு, அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்து வழிபாடு நடத்தினா்.

வீடுகளில் பொங்கல் வைத்தாலும், ஊா் ஒற்றுமையையும், நன்மையையும் கருதி ஊா்கூடி வைத்த பொங்கல், அப்பகுதி மக்களிடையே ஒற்றுமையையும், வரவேற்பையும் பெற்றுள்ளது.

திருவாரூா் சட்டப்பேரவை அலுவலகத்தில்....

இதேபோல், திருவாரூா் சட்டப்பேரவை அலுவலகத்தில் சமத்துவப் பொங்கல் விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு திருவாரூா் சட்டப்பேரவை உறுப்பினா் பூண்டி கே. கலைவாணன் தலைமை வகித்தாா். இதைத்தொடா்ந்து, ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில், திமுக நகரச் செயலாளா் பிரகாஷ், ஒன்றியச் செயலாளா்கள் தேவா, ,சேகா் என்கிற கலியபெருமாள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com