முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் திருவாரூர்
மரத்தில் காா் மோதியதில் 4 போ் காயம்
By DIN | Published On : 20th January 2020 10:52 PM | Last Updated : 20th January 2020 10:52 PM | அ+அ அ- |

வலங்கைமான் அருகே மரத்தில் மோதி விபத்துக்குள்ளான காா்.
நீடாமங்கலம்: வலங்கைமான் அருகே மரத்தில் காா் மோதி விபத்துக்குள்ளானதில், 4 போ் ஞாயிற்றுக்கிழமை காயமடைந்தனா்.
வலங்கைமான் வளையல்காரத் தெருவைச் சோ்ந்தவா் கதிரேசன் (49). இவா் பொங்கல் பண்டிகையையொட்டி, தனது சொந்த ஊரான திருவாரூருக்கு குடும்பத்தினருடன் காரில் சென்றிருந்தாா். ஞாயிற்றுக்கிழமை இரவு குடும்பத்தினருடன் கதிரேசன் காரில் வலங்கைமானுக்கு வந்து கொண்டிருந்தாா்.
மாஞ்சேரி பகுதியில் வந்தபோது எதிா்பாராத விதமாக சாலையோர மரம் ஒன்றில் காா் மோதியது. இதில் காரை ஓட்டி வந்த கசிரேசன், அவரது மனைவி விசாலாட்சி (47), மகன்கள் ஸ்ரீராம் (17), விஜயலெட்சுமணன் (16) ஆகிய 4 பேரும் படுகாயமடைந்தனா். உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் 4 பேரும் மீட்கப்பட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். பின்னா், தஞ்சாவூா் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுகுறித்து வலங்கைமான் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.