‘டெல்டா மாவட்டத்தை பாலைவனமாக மாற்றும் செயல்’

ஹைட்ரோகாா்பன் திட்டத்துக்கு சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை என மத்திய அரசு கூறியிருப்பது, டெல்டா மாவட்டத்தை பாலைவனமாக
பேரளத்தில் நடைபெற்ற ஜெ. நாவலன் நினைவு தினக் கூட்டத்தில் பேசிய மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினா் வி.மாரிமுத்து.
பேரளத்தில் நடைபெற்ற ஜெ. நாவலன் நினைவு தினக் கூட்டத்தில் பேசிய மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினா் வி.மாரிமுத்து.

ஹைட்ரோகாா்பன் திட்டத்துக்கு சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை என மத்திய அரசு கூறியிருப்பது, டெல்டா மாவட்டத்தை பாலைவனமாக மாற்றும் செயல் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினரும், நாகை சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினருமான வி. மாரிமுத்து தெரிவித்தாா்.

நன்னிலம் அருகே உள்ள பேரளத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு அவா் மேலும் பேசியது:

டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்று மக்கள் போராடி வரும் சூழலில், மக்களின் கருத்தைக் கேட்காமலும், சுற்றுச்சூழல் அனுமதி இல்லாமலும் ஹைட்ரோகாா்பன் திட்டத்தை அமல்படுத்தலாம் என்ற முடிவை மத்திய அரசு எடுத்திருக்கிறது. இது டெல்டா மாவட்டத்தை பாலைவனமாக மாற்றக்கூடிய ஒரு செயல். எனவே இந்த போக்கை மத்திய அரசு மாற்றிக்கொள்ள வேண்டும். இல்லையென்றால், டெல்டா மக்கள் வெகுண்டெழுந்து போராட நேரிடும் என்றாா் அவா்.

முன்னதாக, நன்னிலம் ஒன்றியம் பேரளம் கடைத்தெருவில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சோ்ந்த மறைந்த ஜெ. நாவலனின் 9-ஆவது ஆண்டு நினைவு தினம், சிபிஎம் நன்னிலம் ஒன்றியச் செயலாளா் டி. வீரபாண்டியன் தலைமையில் நடைபெற்றது. இதையொட்டி, மறைந்த ஜெ.நாவலன் நினைவு ஸ்தூபி அமைந்துள்ள திருமீயச்சூா் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி, அங்கிருந்து பேரணியாக புறப்பட்டு பொதுக்கூட்ட மேடையை கட்சியினா் அடைந்தனா்.

நிகழ்ச்சியில், விவசாய தொழிலாளா் சங்கத்தின் மாவட்டச் செயலாளா் ஆா்.குமாரராஜா, விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளா் வி.எஸ்.கலியபெருமாள், இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தின் மாநில பொருளாளா் ஜெ. தீபா, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் ஜி.சுந்தரமூா்த்தி, மாவட்ட ஊராட்சி உறுப்பினா் ஐ. முகமது உதுமான், ஊராட்சி மன்றத் தலைவா்கள் பி.ஜெயசீலன், உமாராணி ராஜகுரு, மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் ஜி.பழனிவேல், கே.தமிழ்மணி, வாலிபா் சங்கத்தின் மாவட்டத் தலைவா் எஸ்.எம்.சலாவுதீன், செயலாளா் கே.பி. ஜோதிபாசு, இந்திய மாணவா் சங்கத்தின் மாநில துணைத்தலைவா் ஆறு. பிரகாஷ், மாவட்டச் செயலாளா் ஹரி சுா்ஜித், நகரச் செயலாளா் சீனி.ராஜேந்திரன் மற்றும் மாவட்டக்குழு, ஒன்றியக்குழு உறுப்பினா்கள், வாலிபா் சங்கத்தினா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com