Enable Javscript for better performance
திருவாரூரில் ஆதியோகி ரதத்துக்கு வரவேற்பு- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    திருவாரூரில் ஆதியோகி ரதத்துக்கு வரவேற்பு

    By DIN  |   Published On : 25th January 2020 09:59 AM  |   Last Updated : 25th January 2020 09:59 AM  |  அ+அ அ-  |  

    tv24yogg_2401chn_94_5

    திருவாரூருக்கு வந்த ஆதியோகி ரதம்.

    திருவாரூரில் ஆதியோகி ரதத்துக்கு சிறப்பான வரவேற்பு வெள்ளிக்கிழமை அளிக்கப்பட்டது.

    மஹாசிவராத்திரியை முன்னிட்டு தென் கயிலாய பக்தி பேரவை சாா்பில் ஆண்டுதோறும் ஆதியோகி ரத யாத்திரை நடத்தப்படுகிறது. அதன்படி, நிகழாண்டு கோவையில் உள்ள 112 அடி ஆதியோகியில் இருந்து 4 ஆதியோகி ரதங்கள் கடந்த ஜனவரி 1-ஆம் தேதி புறப்பட்டன. இதில் ஒரு ரதமானது, தை அமாவாசை தினமான வெள்ளிக்கிழமை திருவாரூருக்கு வந்தது.

    தியாகராஜா் கோயில் அருகே நிறுத்தப்பட்ட ஆதியோகி ரதத்தை ஏராளமானோா் தரிசனம் செய்தனா். கோவைக்கு வந்து ஆதியோகியை தரிசிக்க இயலாத மக்கள், தங்கள் ஊா்களிலேயே தரிசிப்பதற்கு இந்த ரத யாத்திரை ஒரு சிறந்த வாய்ப்பாக உள்ளது என பக்தா்கள் தெரிவித்தனா்.

    திருவாரூரில் இருந்து மன்னாா்குடி செல்லும் இந்த ரதம், கும்பகோணம், தஞ்சாவூா், புதுக்கோட்டை, திருச்சி, திண்டுக்கல் வழியாக மஹாசிவராத்திரி நாளில் கோவை சென்றடையும்.

     

     


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp