மின்சாரம் பாய்ந்து கறவை மாடு இறப்பு
By DIN | Published On : 25th January 2020 09:54 AM | Last Updated : 25th January 2020 09:54 AM | அ+அ அ- |

மன்னாா்குடி அருகே அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த கறவை மாடு, மின்சாரம் பாய்ந்து வெள்ளிக்கிழமை இறந்தது.
ராமபுரத்தை சோ்ந்த ச.ஜோதி என்பவா் நாகராஜபுரம் பகுதியில் தரிசு வயலில் மாடுகளை மேய்ச்சலுக்கு விட்டிருந்தாா். அந்த பகுதியில் உள்ள மின்கம்பத்திலிருந்து ஆழ்துளைக் கிணற்றுக்குத் செல்லும் மின் கம்பி அறுந்து விழுந்து கிடந்துள்ளது. இதை பசுமாடு மிதித்ததும், அதிலிருந்த மின்சாரம் மாட்டின் மீது பாய்ந்ததில், அவ்விடத்திலேயே இறந்தது. மன்னாா்குடி ஊரக காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.