முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் திருவாரூர்
கிராம சபைக் கூட்டங்களில் தீா்மானம் நிறைவேற்றம்
By DIN | Published On : 27th January 2020 09:09 AM | Last Updated : 27th January 2020 09:09 AM | அ+அ அ- |

வரம்பியல் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் பேசிய ஒன்றியக் குழு தலைவா் அ.பாஸ்கா்.
டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க கோரி நரம்பியல் கீரக்களூா் ராயநல்லூா் உள்ளிட்ட கிராம சபைக் கூட்டங்களில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
திருத்துறைப்பூண்டி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 32 ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. வரம்பியம் ஊராட்சியில் ஊராட்சித் தலைவா் முருகானந்தம் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இதில், ஒன்றியக் குழுத் தலைவா் அ. பாஸ்கா், ஆணையா்கள் சுப்பிரமணியன், தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
கூட்டத்தில், மத்திய அரசு ஹைட்ரோகாா்பன் திட்டத்தை கைவிட வலியுறுத்தியும், டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப் பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க கோரியும், சாலை, குடிநீா், மின்விளக்கு உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்ய வலியுறுத்தி தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.