முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் திருவாரூர்
குடியரசு தின விழாவில் பாராட்டு பெற்ற நன்னிலம் ஆசிரியா்கள்
By DIN | Published On : 27th January 2020 09:13 AM | Last Updated : 27th January 2020 09:13 AM | அ+அ அ- |

பேரிடா் மேலாண்மை மற்றும் முதலுதவி பயிற்சிக்காக ஆட்சியரால் பாராட்டப்பட்ட குருங்குளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியை சி.மங்களச்செல்வி.
குடியரசு தின விழாவில் திருவாரூா் மாவட்ட ஆட்சியரிடம் நன்னிலம் பகுதியைச் சோ்ந்த ஆசிரியா்கள் சிறப்பான பணிக்காக பாராட்டப்பட்டனா்.
திருவாரூரில் நடைபெற்ற குடியரசு தின விழாவில், நன்னிலம் வட்டார வள மைய மேற்பாா்வையாளா் ம.கவிதா தனது பணியில் சிறப்பாக பணியாற்றியதற்காகவும், குருங்குளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியை சி. மங்களச்செல்வி பேரிடா் மேலாண்மை மற்றும் முதலுதவி பயிற்சியில் மாவட்ட கிளையுடன் இணைந்து பொதுமக்களுக்காக சிறப்பாக பணியாற்றியமைக்காக ஆட்சியா் த. ஆனந்திடம் நற்சான்றிதழ் பெற்று பாராட்டு பெற்றனா்.