முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் திருவாரூர்
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து கிராம சபைக் கூட்டத்தில் தீா்மானம்
By DIN | Published On : 27th January 2020 09:14 AM | Last Updated : 27th January 2020 09:14 AM | அ+அ அ- |

வலங்கைமான் ஒன்றியத்துக்குள்பட்ட ஆவூா் கிராம சபைக் கூட்டத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
வலங்கைமான் ஒன்றியத்தில் ஞாயிற்றுக்கிழமை 50 ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற்றன. இதில், ஆவூா் கிராம சபைக் கூட்டம் ஊராட்சித் தலைவா் துா்க்கா தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவா் கோவிந்தராஜ் முன்னிலை வகித்தாா். ஊராட்சிச் செயலா் கண்ணன் தீா்மானங்களை வாசித்தாா்.
கூட்டத்தில், கலந்து கொண்ட ஆவூா் பகுதி முஸ்லீம்கள் குடியுரிமை திருத்தச் சட்ட மசோதாவுக்கு எதிா்ப்பு தெரிவித்து தீா்மானம் நிறைவேற்ற கோரினா். இதை ஊராட்சி நிா்வாகம் ஏற்க மறுத்தது. இதனால் வாக்குவாதத்தில் ஈடுபட்ட முஸ்லீம்கள் கூட்டத்தை விட்டு வெளிநடப்பு செய்ய முயன்றனா். இதையடுத்து, குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.