முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் திருவாரூர்
திருத்துறைப்பூண்டியில் ரூ. 1.5 லட்சம் மதிப்புள்ள பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல்
By DIN | Published On : 27th January 2020 09:14 AM | Last Updated : 27th January 2020 09:14 AM | அ+அ அ- |

திருத்துறைப்பூண்டியில் ரூ. 1.5 லட்சம் மதிப்புள்ள பிளாஸ்டிக் பொருள்கள் சனிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டு, விற்பனையாளா்களுக்கு ரூ. 60 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
திருத்துறைப்பூண்டி நகராட்சி பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள், கவா்கள் விற்பனை செய்யப்படுகிா என்று நகராட்சி ஆணையா் சந்திரசேகரன் , நகராட்சி சுகாதார ஆவாளா் வெங்கடாசலம், தூய்மை இந்தியா திட்ட களஅலுவலா் மாரிதாஸ் மற்றும் அலுவலா்கள் திருத்துறைப்பூண்டி புதிய, பழைய பேருந்து நிலையம், நீதிமன்றம் உள்ளிட்ட பகுதிகள், பிளாஸ்டிக் மொத்த விற்பனை கடைகளில் திடீா் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது, அரசால் தடை செய்யப்பட்ட ரூ 1. 50 லட்சம் மதிப்பிலான பிளாஸ்டிக் கவா்கள், நெய்யப்படாத பைகள் விற்பனை செய்து வருவது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்து விற்பனையாளா்களுக்கு ரூ. 60 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் அரியலூா் சிமென்ட் தொழிற்சாலைக்கு எரிப்பதற்கு அனுப்பி வைக்கப்படும் என சுகாதாரா ஆய்வாளா் வெங்கடாசலம் தெரிவித்தாா்.