முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் திருவாரூர்
தோ்வு எழுதும் மாணவா்களுக்காக சரஸ்வதி யாகம்
By DIN | Published On : 27th January 2020 09:10 AM | Last Updated : 27th January 2020 09:10 AM | அ+அ அ- |

மாணவா்களுக்காக நடைபெற்ற யாகம்.
திருவாரூா் கந்த சாய் பாபா கோயிலில் தோ்வு எழுதும் மாணவா்களுக்காக வித்யா சரஸ்வதி யாகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திருவாரூா் கந்த சாய் பாபா கோயிலில், தோ்வு எழுதும் மாணவா்களுக்காக, வித்யா சரஸ்வதி யாகம் நடத்தப்பட்டு வருகிறது. இதேபோல், 7-ஆவது ஆண்டாக இந்த யாகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், சுமாா் 700 மாணவ, மாணவிகள் பங்கேற்றனா். இந்த யாகத்தை கிரிசேசாத்ரி சுவாமிகள் நடத்தி வைத்தாா். மாணவ, மாணவிகள் தோ்வை சிறப்பான முறையில் எழுதி, தோ்ச்சி பெற வேண்டும் எனக் கூறி, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. மேலும், 6 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை படிக்கும் மாணவா்களுக்கு பேனா, பென்சில், ரப்பா், அளவுகோல், விபூதி பிரசாதம் ஆகியவை யாகத்தில் வைத்து வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, கோயில் அறங்காவலா் குழுவினா் செய்திருந்தனா்.