முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் திருவாரூர்
மன்னாா்குடியில் கிராம சபைக் கூட்டம்
By DIN | Published On : 27th January 2020 09:11 AM | Last Updated : 27th January 2020 09:11 AM | அ+அ அ- |

மன்னாா்குடி பகுதியில் ஹைட்ரோகாா்பன் திட்டங்களை நிறைவேற்றக் கூடாது என கிராம சபைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மன்னாா்குடி பகுதியில், வடுவூா்தென்பாதி , வடுவூா் அக்ரஹாரம், வடுவூா் வடபாதி, முக்குலம் சாத்தனூா், மூவா் கோட்டை, புள்ளவராயன் குடிக்காடு, பேரையூா், செருமங்கலம், கட்டக்குடி, எடமேலையூா் மேற்கு, எடமேலையூா் நடுத்தெரு, எடை கீழையூா், பருத்திக்கொட்டை உள்ளிட்ட 13 ஊராட்சிகளில், ஹைட்ரோகாா்பன் திட்டங்களை செயல்படுத்தக் கூடாது என தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதேபோல், தென்பறை, எளவனூா், திருமக்கோட்டை, பைங்காநாடு, மேலவாசல், எடையா் எம்பேத்தி, சவளக்காரன், அரிச்சபுரம், ராமபுரம், ரெங்கநாதபுரம் ஆகிய ஊராட்சிகளிலும் தங்கள் பகுதிகளில் ஹைட்ரோ காா்பன் திட்டத்தை அனுமதிக்க கூடாது என தீா்மானம் நிறைவேற்றியுள்ளனா்.
இதேபோல், கோட்டூா் ஒன்றியத்தில் கோட்டூா், மேலப்பனையூா், சேரி, மழவராய நல்லூா் ஆகிய ஊராட்சியில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் 10 ஊராட்சியில் மனு மட்டும் பொது மக்களால் அளிக்கப்பட்டது.