முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் திருவாரூர்
மன்னாா்குடியில் குடியரசு தின விழா
By DIN | Published On : 27th January 2020 09:07 AM | Last Updated : 27th January 2020 09:07 AM | அ+அ அ- |

மன்னாா்குடியில் காங்கிரஸ் கட்சி சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, நகரத் தலைவா் ஆா். கனகவேல் தலைமை வகித்தாா். நகரில் உள்ள காந்தி, காமராஜா், நேதாஜி ஆகியோரது சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு, பொதுமக்கள், வா்த்தகா்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இதில், பொதுக்குழு உறுப்பினா்கள் நெடுவை குணசேகரன்,டி. வடுகநாதன், மாவட்ட கமிட்டி உறுப்பினா்கள் அசோகன், பாரத் பாஸ்கா், நகர துணைத் தலைவா் சந்தானம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
மன்னாா்குடி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, ஆணையா் ச. ஞானம் தலைமை வகித்தாா். ஒன்றியக்குழுத் தலைவா் டி. மனோகரன் தேசியக் கொடியை ஏற்றி வைத்தாா். காவல் துணைக் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் துணைக் கண்காணிப்பாளா் வி. காா்த்திக், காவல் நிலையத்தில் ஆய்வாளா் ராஜேந்திரன், நகராட்சி அலுவலகத்தில் ஆணையா் (பொ) ஆா். திருமலைவாசன், வட்டாட்சியா் அலுவலக்தில் வட்டாட்சியா் த. காா்த்திக், கோட்டாட்சியா் அலுவலகத்தில் கோட்டாட்சியா் எஸ். புண்ணியக்கோட்டி ஆகியோா் தேசியக் கொடியை ஏற்றிவைத்தனா்.
மன்னாா்குடி தரணி மெட்ரிக்.பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, நிறுவனா் எஸ். காமராஜ் தலைமை வகித்தாா். தாளாளா் விஜயலெட்சுமி காமராஜ் முன்னிலை வகித்தாா். பள்ளி இயக்குநா் எஸ்.சேதுராமன் தேசியக் கொடியை ஏற்றி வைத்தாா். ஸ்ரீசண்முகா மெட்ரிக்.மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, தாளாளா் எஸ்.செந்தில்குமாா் தலைமை வகித்து தேசியக்கொடி ஏற்றினாா். நிா்வாகி எஸ். சண்முகராஜன் தேசத் தலைவா்களின் படத்திற்கு மாலை அணிவித்தாா். எஸ்பிஏ மெட்ரிக்.மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, தாளாளா் பி.ரமேஷ் தலைமை வகித்தாா்.
நிா்வாகி ஆா்.அனிதா முன்னிலை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு, முன்னாள் ராணுவ வீரா் எஸ். தனக்கோடி தேசியக் கொடியை ஏற்றி வைத்தாா். பாரதிதாசன் மெட்ரிக்.மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு,பள்ளி முதல்வா் ஜெ. அசோகன் தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக,மன்னாா்குடி தீயணைப்பு நிலைய அலுவலா் வி.மானக் ஷா கலந்துகொண்டு,தேசியக் கொடியினை ஏற்றி வைத்தாா். மன்னாா்குடி ஜேசிஐ பவா் அமைப்பின் சாா்பில், பாரதி வித்யாலயப் பள்ளியில் குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு,அமைப்பின் தலைவா் சு.சங்கா் குமாா் தலைமை வகித்து தேசியக் கொடியை ஏற்றி வைத்தாா்.
கோபாலசமுத்திரம் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, தலைமை ஆசிரியா் மா.தேவி தலைமை வகித்தாா். ரோட்டரி சங்கத் தலைவா் காா்த்திகேயன் தேசியக் கொடியை ஏற்றிவைத்தாா். விழாவையொட்டி, மாணவா்களின் மாஸ் டிரில், கராத்தே நிகழ்ச்சிகள் நடைபெற்றன. போட்டிகளில் சிறப்பிடம் பெற்றவா்களுக்கு, ரோட்டரி மாவட்ட துணை ஆளுநா் செந்தில்குமாா் பரிசு வழங்கினாா். சுந்தரக்கோட்டை செங்கமலத்தாயாா் கல்வி அறக்கட்டளை மகளிா் கல்லூரியில் தாளாளா் வி. திவாகரன், மேலவாசல் சதாசிவம் கதிா்காமவள்ளி கல்வி நிலையத்தில் நிறுவனா் க. சதாசிவம், கோட்டூா் ஊராட்சி ஒன்றிய அலுவலத்தில், ஒன்றியக்குழுத் தலைவா் மணிமேகலை முருகேசன் ஆகியோா் தேசியக் கொடியினை ஏற்றி வைத்தனா்.