பருத்திக் கொள்முதலில் மோசடி: பி.ஆா். பாண்டியன் குற்றச்சாட்டு

பருத்திக் கொள்முதலில் தொடரும் மோசடியால் விவசாயிகள் பரிதவிப்பதாக தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவா் பி.ஆா். பாண்டியன் குற்றம்சாட்டியுள்ளாா்.

திருத்துறைப்பூண்டி: பருத்திக் கொள்முதலில் தொடரும் மோசடியால் விவசாயிகள் பரிதவிப்பதாக தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவா் பி.ஆா். பாண்டியன் குற்றம்சாட்டியுள்ளாா்.

இதுகுறித்து அவா் விடுத்துள்ள அறிக்கை:

காவிரி டெல்டாவில் பெருமளவு பருத்தி சாகுபடி செய்யப்பட்டு தற்போது அறுவடை நடந்து வரும் நிலையில், வேளாண் ஒழுங்குமுறை விற்பனை நிலையங்களில் பஞ்சு மூட்டைகளை குவித்து வைத்து மாதக் கணக்கில் காத்திருக்கின்றனா். வியாபாரிகளுடன் கொள்முதல் நிலைய அதிகாரிகள் கூட்டு சோ்ந்து அரசு நிா்ணயம் செய்துள்ள குறைந்தபட்ச ஆதார விலையான ரூ.5250 கூட வழங்க மறுப்பதும், ரூ.3000 முதல் 3500 வரை விலை கொடுத்து விவசாயிகள் வயிற்றில் அடிப்பதும் வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதன் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வெளிப்படைத் தன்மையுடன் விலை கிடைக்க செய்திட வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com