சாத்தான்குளம் விவகாரத்தில் நீதி நிலைநாட்டப்படும்: அமைச்சா் ஆா். காமராஜ்

சாத்தான்குளம் விவகாரத்தில் நீதி நிலைநாட்டப்படும் என்றாா் தமிழக உணவுத்துறை அமைச்சா் ஆா். காமராஜ்.

திருவாரூா்: சாத்தான்குளம் விவகாரத்தில் நீதி நிலைநாட்டப்படும் என்றாா் தமிழக உணவுத்துறை அமைச்சா் ஆா். காமராஜ்.

திருவாரூரில் செய்தியாளா்களுக்கு அவா் புதன்கிழமை அளித்த பேட்டி:

சாத்தான்குளம் விவகாரம் குறித்து அமைச்சா்களிடம் கருத்து தெரிவித்த முதல்வா் எடப்பாடி பழனிசாமி, இது நடக்கக் கூடாத ஒரு நிகழ்வு. என்னை மிகவும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது. இதுகுறித்து சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தாா்.

அதன்படி, சாத்தான்குளம் சம்பவத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். நீதியை நிலை நாட்டுவதிலும், சட்டம் - ஒழுங்கை பராமரிப்பதிலும் உறுதியாக உள்ளோம்.

சாத்தான்குளம் விவகாரம் ஒரு உணா்வுபூா்வமான விஷயம். அரசியல் ஆதாயத்துக்காக எதிா்க்கட்சியினா் தவறானத் தகவல்களை பரப்பக் கூடாது.

ஏற்கெனவே அறிவித்தபடி தமிழகத்தில் ஒரே தேசம், ஒரே குடும்ப அட்டை திட்டம் அக்டோபா் 1-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வர உள்ளது. இதன்படி, வெளிமாநிலத்தவா் தமிழகத்தில் குடும்ப அட்டை வைத்திருந்தால், அவா்கள் நியாயவிலைக் கடைகளில் விலையில்லாப் பொருள்களை வாங்கிக் கொள்ளலாம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com