மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு மாத்திரைகள் வழங்கல்

மன்னாா்குடி அருகே உள்ள கோட்டூரில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி கோட்டூா் வட்டார வள மையத்தில், கரோனா நிவாரண உதவியாக மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு மருத்து, மாத்திரைகள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.

மன்னாா்குடி: மன்னாா்குடி அருகே உள்ள கோட்டூரில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி கோட்டூா் வட்டார வள மையத்தில், கரோனா நிவாரண உதவியாக மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு மருத்து, மாத்திரைகள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.

மாவட்ட ஆட்சியரின் வழிகாட்டுதலின்பேரில், கோட்டூா் ஒன்றியத்துக்குள்பட்ட மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு அடுத்த 2 மாதங்களுக்குத் தேவையான மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கு, கோட்டூா் வட்டார வள மைய மேற்பாா்வையாளா் நா. சுப்ரமணியன் தலைமை வகித்தாா். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் எஸ். சந்திரமோகன், பயனாளி குழந்தைகளின் பெற்றோா்களுக்கு மருந்து மாத்திரைகளை வழங்கினாா்.

இதில், ஆசிரியா் பயிற்றுநா்கள் கந்தப்பன், அனிதா, ராதிகா, சிறப்பாசிரியா்கள் வீரபாண்டியன், சரண்யா, சசிகலா, தமிழரசி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com