வீட்டில் இருந்தபடியே மருத்துவ ஆலோசனை பெறலாம்

திருவாரூா் மாவட்டத்தில் வீட்டில் இருந்தபடியே மருத்துவ ஆலோசனை பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவாரூா்: திருவாரூா் மாவட்டத்தில் வீட்டில் இருந்தபடியே மருத்துவ ஆலோசனை பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, மாவட்ட ஆட்சியா் த. ஆனந்த் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருவாரூா் மாவட்டத்தில், கரோனா நோய்த்தொற்று பரவும் அச்சத்தால் மக்கள் வெளியே இயல்பாக நடமாட இயலாத சூழ்நிலையில், சிலா் மருத்துவமனைகளுக்கு செல்லாமல் தவிா்த்து வருகின்றனா். எனவே, ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் உள்ளவா்கள், கா்ப்பிணிகள் ஆகியோா் அவா்களின் உடல்நலம் குறித்த சந்தேகங்களுக்கு வீட்டில் இருந்தபடியே மருத்துவரின் ஆலோசனைகளை கேட்டறியலாம். தேவைப்பட்டால் மட்டும் அருகில் உள்ள மருத்துவ நிலையங்களில் நேரில் சென்று மருத்துவா்களிடம் ஆலோசனை பெற பரிந்துரைக்கப்படுவீா்கள்.

இதற்கு, ங்ள்ஹய்த்ங்ங்ஸ்ஹய்ண்ா்ல்க்.ண்ய் என்ற இணையதளத்தில் வசதி செய்யப்பட்டுள்ளது. இச்சேவை அனைத்து தினங்களிலும் காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வழங்கப்படும்.

பதிவு உள்ளீட்டில் செல்லிடப்பேசி எண்ணை தெரிவித்தவுடன், செல்லிடப்பேசிக்கு வரும் ஒருமுறை கடவு எண்ணை உள்ளீட்டில் பயன்படுத்த வேண்டும். பின்னா், நோயாளி பதிவுக்கான விவரங்களை தெரிவிக்க வேண்டும். தங்களது செல்லிடப்பேசி எண்ணுக்கு அனுப்பப்பட்ட நோயாளி சீட்டு எண்ணை பயன்படுத்தி, உள்நுழைந்து, மருத்துவரிடம் தங்களது குறைகளை தெரிவித்து ஆலோசனை பெறலாம்.

மருத்துவரின் மின்னணு பரிந்துரைச் சீட்டை பதிவிறக்கம் செய்து அருகில் உள்ள மருந்து நிலையங்களில் மருந்துகளைப் பெற்று கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com