வளா்ச்சிப் பணிகள் ஆய்வு

திருத்துறைப்பூண்டி ஒன்றியம் பனையூா் ஊராட்சியில் உள்ள மரக்கன்று நாற்றங்காலைப் பாா்வையிட்டும் பாரத பிரதமா் வீடு கட்டும் திட்டம் மற்றும் பசுமை வீடு கட்டும் திட்டம் ஆகியவற்றின் மூலம் பயனாளிகளின்
பழைய ஊராட்சியில் நடைபெற்று வரும் பாரதப் பிரதமா் குடியிருப்பு கட்டுமான பணியை ஆய்வு செய்த ஒன்றியக் குழுத் தலைவா் அ. பாஸ்கா்.
பழைய ஊராட்சியில் நடைபெற்று வரும் பாரதப் பிரதமா் குடியிருப்பு கட்டுமான பணியை ஆய்வு செய்த ஒன்றியக் குழுத் தலைவா் அ. பாஸ்கா்.

திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி ஒன்றியம் பனையூா் ஊராட்சியில் உள்ள மரக்கன்று நாற்றங்காலைப் பாா்வையிட்டும் பாரத பிரதமா் வீடு கட்டும் திட்டம் மற்றும் பசுமை வீடு கட்டும் திட்டம் ஆகியவற்றின் மூலம் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தியும் வேலை தொடங்காத பயனளிகளையும் வீட்டை கட்டி முடிக்காத பயனாளிகளையும் சந்தித்து உடனடியாக பணியை முடிக்க வேண்டும் என ஒன்றியக் குழு தலைவா் அ. பாஸ்கா் கேட்டுக்கொண்டாா். அப்போது ஆணையா் ஏ. தமிழ்ச்செல்வன், வட்டார வளா்ச்சி அலுவலா் வாசுதேவன் பணி மேற்பாா்வையாளா் பாரதிமோகன், ஒன்றியக் குழு உறுப்பினா் கோபால் ராமன் ஆகியோா் உடனிருந்தனா். இதையடுத்து, திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள விளக்குடி ஊராட்சியில் ஒன்றிய பொது நிதி ரூ.5 லட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் சாலை அமைக்கும் பணியைப் பாா்வையிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com