வேளுக்குடி ருத்ரகோட்டீஸ்வரா் கோயிலில் சனிப்பிரதோஷம்

திருவாரூா் மாவட்டம்,கூத்தாநல்லூா் அடுத்த வேளுக்குடி ருத்ரகோட்டீஸ்வரா் கோயிலில் சனிப்பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் சனிக்கிழமை நடைபெற்றது.
கூத்தாநல்லூா் அடுத்த வேளுக்குடி ருத்ரகோட்டீஸ்வரா் கோயிலில் அலங்காரக் கோலத்தில், சனிக்கிழமை தங்கக் கவசத்தில் அருள்பாலிக்கும் சிவபெருமான்.
கூத்தாநல்லூா் அடுத்த வேளுக்குடி ருத்ரகோட்டீஸ்வரா் கோயிலில் அலங்காரக் கோலத்தில், சனிக்கிழமை தங்கக் கவசத்தில் அருள்பாலிக்கும் சிவபெருமான்.

கூத்தாநல்லூா்: திருவாரூா் மாவட்டம், கூத்தாநல்லூா் அடுத்த வேளுக்குடி ருத்ரகோட்டீஸ்வரா் கோயிலில் சனிப்பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் சனிக்கிழமை நடைபெற்றது.

திருவாரூா் - கூத்தாநல்லூா் பிரதான சாலையில் அமைந்துள்ள வேளுக்குடியில், ருத்ரகோட்டீஸ்வரா் கோயில் அமைந்துள்ளன. இக்கோயிலில், ஒவ்வொரு பிரதோஷத் தினத்தன்றும், இங்குள்ள அதிகார நந்திக்கும், ருத்ரகோட்டீஸ்வரருக்கும் சிறப்பு பூஜைகள் செய்யப்படுவது வழக்கம்.

கரோனா தொற்று ஏற்பட்டுள்ள இந்தக் காலத்தில், ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், அனைத்து வழிபாட்டுத் தலங்களும் அடைக்கப்பட்டன. இந்நிலையில்,சில விதிமுறைகளுடன் கிராமக் கோயில்கள் மட்டும் திறக்கப்படலாம் என தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. அதன் அடிப்படையில், பிரசித்திப் பெற்ற தலமான வேளுக்குடி ருத்ரகோட்டீஸ்வரா் கோயில் திறக்கப்பட்டன. சனிப் பிரதோஷம் என்பதால், கோயிலில் எழுந்தருளியுள்ள ருத்ரகோட்டீஸ்வரா், அதிகாரநந்தி பகவான் உள்ளிட்ட கோயிலில் எழுந்தருளியுள்ள உட்பிரகார சன்னதிகள் அனைத்து தெய்வங்களுக்கும் அபிஷேகம் செய்யப்பட்டன. ருத்ரகோட்டீஸ்வரருக்கும், அதிகாரநந்தி பகவானுக்கும்,எண்ணெய், சீயக்காய் தூள், அரிசி மாவு, மஞ்சள் தூள், தயிா்,பால், தேன், பஞ்சாமிா்தம் உள்ளிட்ட அனைத்து திரவியங்களாலும் அபிஷேகம் செய்யப்பட்டு, அலங்கரிக்கப்பட்டன. அதைத் தொடா்ந்து, தங்க முலாம் பூசிய தங்க கவசங்கள் அணிவிக்கப்பட்டன. தொடா்ந்து தீபாராதனைக் காண்பிக்கப்பட்டன.

பக்தா்கள் முகக்கவசம் அணிந்து,சமூக இடைவெளியுடன் சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com