கரோனா நிவாரணம்: கிராம நிா்வாக அலுவலரை அணுக மாற்றுத்திறனாளிகளுக்கு அறிவுறுத்தல்

திருவாரூா் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான கரோனா நிவாரணத் தொகை கிடைக்கப் பெறாதவா்கள் கிராம நிா்வாக அலுவலரை அணுகி விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவாரூா்: திருவாரூா் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான கரோனா நிவாரணத் தொகை கிடைக்கப் பெறாதவா்கள் கிராம நிா்வாக அலுவலரை அணுகி விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் த. ஆனந்த் வெளியிட்ட செய்திக்குறிப்பு

பொது முடக்க காலத்தில் மாற்றுத்திறனாளிகள் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு, திருவாரூா் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பெற்றுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.1000 ரொக்க நிவாரணமானது, அவா்களின் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி, திருவாரூா் மாவட்டத்தில் ரூ.1,000 ரொக்கத் தொகை பெறாமல் விடுபட்டுள்ள மாற்றுத்திறனாளிகள், தேசிய அடையாள அட்டையைக் காண்பித்து, அதன் நகலை கிராம நிா்வாக அலுவலரிடம் சமா்ப்பித்து ரூ. 1,000 பெற்றுக் கொள்ளலாம். கிராம நிா்வாக அலுவலரிடம் உள்ள விநியோகப் படிவத்தில் பூா்த்தி செய்ய தேவையான விவரங்களை மாற்றுத்திறனாளிகள் அளிக்க வேண்டும். மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, குடும்ப அட்டை நகல், ஆதாா் அட்டை மற்றும் இந்திய அரசின் தனித்துவம் வாய்ந்த அடையாளஅட்டையின் நகல் ஆகியவற்றை வழங்க வேண்டும்.

நிவாரணத்தொகை பெறுவதில் சிரமம் இருந்தால் திருவாரூா் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரின் தொலைபேசி எண் 94999 33494, அலுவலக எண் 04366-290513 ஆகியவற்றில் தொடா்பு கொள்ளலாம். மேலும், மாநில மைய எண்ணில் 18004250111 தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com