மத்திய, மாநில அரசு திட்டத்தில் கட்டிய வீட்டை காணவில்லை என 22 பேர் புகார்

மன்னார்குடி அருகே, மத்திய, மாநில அரசின் திட்டத்திலிருந்து, வீடுகட்டியிருப்பதாக பதிவேட்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் நிலையில், கட்டிய வீடுகளை காணவில்லை என
மத்திய, மாநில அரசு திட்டத்தில் கட்டிய வீட்டை காணவில்லை என 22 பேர் புகார்

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே, மத்திய, மாநில அரசின் திட்டத்திலிருந்து, வீடுகட்டியிருப்பதாக பதிவேட்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் நிலையில், கட்டிய வீடுகளை காணவில்லை என விண்ணப்பம் அளித்திருந்த 22 பேர் காவல்நிலையத்தில், வியாழக்கிழமை புகார் அளித்துள்ளனர்.

மன்னார்குடி ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்ட தலையாமங்கலம் ஊராட்சியில் மத்திய அரசின் பாரத பிரதமர் வீடுக்கட்டும் திட்டம் மற்றும் தமிழக அரசின் முதலமைச்சரின் சூரியஒளியுடன் கூடிய பசுமைவீடு கட்டும் திட்டம் ஆகியவற்றிற்கு பயணாளிகள் தேர்வுக்காக,கடந்த 2016 முதல் 2019 வரை உள்ள காலக்கட்டத்தில் பயணாளிகள் தேர்வு நடைபெற்றுள்ளது. 

இத்திட்டத்தில்,இணைவதற்காக ஊராட்சிக்கு உள்பட்ட பகுதியை சேர்ந்த 225 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில்,141 பேர் மட்டும் தகுதியானவர்கள் என தேர்வு செய்யப்பட்டனர். இவர்களில், 39 பேருக்கு மன்னார்குடி ஊராட்சி ஒன்றியத்திலிருந்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதுடன் சிமெண்ட், கம்பி உள்ளிட்ட வீடுகட்ட தேவையானப் பொருள்கள் வழங்கப்பட்டு வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்,மத்திய,மாநில அரசுகளின் வீடுகட்டும் திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு. வீடு கட்டுவதற்காக தலா ரூபாய் 1.80 லட்சம் நிதி பெற்று, வீடு கட்டி முடித்தவர்கள் பதிவேட்டில், தலையாமங்கலத்தில் ஊராட்சியில் தகுதியானவர்கள் என தேர்வு செய்யப்பட்ட 141 பேருடைய பெயரும் இருப்பது தெரியவந்துள்ளது.

 இது குறித்து,பாதிக்கப்பட்டவர்கள்,தங்களிடம் திட்டப்பணிக்கு பயணாளிகள் தேர்வு செய்யப்பட்ட காலக் கட்டத்தில் விண்ணப்பங்களை பெற்ற ஊராட்சி நிர்வாகம் மற்றும் மன்னார்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டும் முறையான பதில் இல்லாததை அடுத்து.
 வீடு கட்ட தேர்வு செய்யப்பட்டும் அதற்கான நிதி வழங்காது. 

வீடு கட்டியிருப்பதாக பதிவேட்டில் குறிப்பிட்டுள்ள தலையாமங்கலம் பாரதியார் தெருவைச் சேர்ந்த சி.ஆறுமுகம்(60), என்,கிருஷ்ணமூர்த்தி(65), டி.மகேந்திரன்(45), சு.அஞ்சலை(65), வடக்குதெரு க.அமிதவள்ளி(55), தெற்குதெரு ஆர்.அமிதவள்ளி(75) உள்ளிட்ட 22 பேர்.

தலையாமங்கலம் காவல்நிலையத்தில் வியாழக்கிழமை அளித்துள்ள புகார் மனுவில், எங்களது பெயரில் உள்ள பட்டா நிலத்தில், மத்திய, மாநில அரசுகள் வழங்கிய வீடு கட்டும் திட்டத்தில் வீடு கட்டி உள்ளதாக அரசுப் பதிவேட்டில் பதிவாகி உள்ளது. ஆனால்,அந்த இடத்தில் வீட்டை காணவில்லை. இது குறித்து விசாரித்து, வீட்டை மீட்டுத் தரும்படி கேட்டுக்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com