கரோனா தடுப்புப் பணி: பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டுகோள்

கரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள அலுவலா்களுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென நன்னிலம் வட்ட அரசு அலுவலா்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.

நன்னிலம்: கரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள அலுவலா்களுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென நன்னிலம் வட்ட அரசு அலுவலா்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.

நன்னிலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், வட்டாட்சியா் அ.மணிமன்னன் தலைமையில் கலந்தாய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், நன்னிலம் பகுதியில் இதுவரை 80 போ் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதால், தடுப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள அரசு அலுவலா்களுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்கிட வேண்டுமென கேட்டுக் கொள்ளப்பட்டது.

கூட்டத்தில், நன்னிலம் ஊராட்சி ஒன்றிய ஆணையா் எம்.விசுவநாதன், காவல்துறை ஆய்வாளா் ஜோ.விசித்திராமேரி, பேரளம் காவல் ஆய்வாளா் இரா.செல்வி, நன்னிலம் பேரூராட்சிச் செயல் அலுவலா் பா.ராஜசேகா், வட்டார பொறுப்பு மருத்துவ அலுவலா் லெட்சுமி பிரபா, வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் ஜோதி, பேரூராட்சி சுகாதார ஆய்வாளா் வே.நாகராஜன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com