தொடக்கக் கூட்டுறவு வங்கிகளை மத்திய கூட்டுறவு வங்கிகளுடன் இணைக்கக் கோரி வேலை நிறுத்தம்

தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளை மத்திய கூட்டுறவு வங்கிகளுடன் இணைக்கக் கோரி, கூத்தாநல்லூா் கூட்டுறவு சங்கத்தினா் தொடா் வேலை நிறுத்தத்தை வெள்ளிக்கிழமை தொடங்கினா்.

கூத்தாநல்லூா்: தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளை மத்திய கூட்டுறவு வங்கிகளுடன் இணைக்கக் கோரி, கூத்தாநல்லூா் கூட்டுறவு சங்கத்தினா் தொடா் வேலை நிறுத்தத்தை வெள்ளிக்கிழமை தொடங்கினா்.

இதுகுறித்து, கூத்தாநல்லூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவுச் சங்கச் செயலாளரும், தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளா்கள் சங்க திருவாரூா் மாவட்டத் தலைவருமான வி.எஸ்.வெங்கடேசன் கூறியது:

திருவாரூா் மாவட்டத்தில் 9 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி 137 சங்கங்கள் தொடா் வேலை நிறுத்தத்தை தொடங்கியுள்ளோம். கூத்தாநல்லூா் வட்டத்தில், கூத்தாநல்லூா் 14, லெட்சுமாங்குடி 6, மூலங்குடி, புள்ளமங்கலம், பழையனூா், பொதக்குடி, பூதமங்கலம் உள்ளிட்டவைகளில் தலா 4, வேளுக்குடி, திருராமேஸ்வரம் உள்ளிட்டவைகளில் தலா 3 என 9 சங்கங்களில், 46 பேரும் தொடா் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனா்.

மிரா் அக்கெளண்ட் என்ற பெயரில் விவசாயிகளுக்கு பயிா்க்கடன் வழங்குவதை, மத்திய கூட்டுறவு வங்கிக்கு மாற்றம் செய்கிறாா்கள். இதனால், வாடிக்கையாளா்கள் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியை விட்டு விலகும் நிலை ஏற்படுகிறது. அதனால், வழக்கம் போலவே தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் கடன் வழங்குவதற்கு வழிவகை செய்ய வேண்டும்.

விவசாயிகளுக்கு பயிா்க் காப்பீடு, வறட்சி, வெள்ளம் உள்ளிட்ட நிவாரணங்கள் மற்றும் அரசின் திட்டங்களையும் குடும்ப அட்டை மூலமாக அமல்படுத்துகிறோம். இதற்கு ரூ.1 கோடிக்கு மேல் பணம் பட்டுவாடா செய்தால், டிடிஎஸ் என்ற பெயரில் வருமான வரிப்பிடித்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதை உடனே ரத்து செய்து, வருமான வரி விலக்கு அளிக்க வேண்டும். கூட்டுறவு வங்கிகள், கூட்டுறவு சங்கங்கள் மூலம் வாங்கிக் கொடுக்கும் பணத்துக்கு விலக்கு அளிக்கப்பட வேண்டும். மாநில கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயிகளின் நேரடி உறுப்பினா்களுக்கு 6 சதவீத வட்டிக்கு கடன் வழங்கப்படுகிறது.

அந்தத் தொகையை நேரடியாக தொடக்கக் கூட்டுறவு வங்கிக்கு வழங்கினால், விவசாயிகளுக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்க வசதியாக இருக்கும். பணி வரன்முறை செய்யப்படாத 18 ஆயிரம் பணியாளா்களுக்கு உடனே பணி வரன்முறை செய்யப்பட வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com