வாத்து மேய்த்த கொத்தடிமை குழந்தை தொழிலாளா்கள் 5 போ் மீட்பு

மன்னாா்குடி பகுதியில் கொத்தடிமை குழந்தை தொழிலாளா்களாக இருந்த 5 பேரை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு வியாழக்கிழமை மீட்டது.

மன்னாா்குடி பகுதியில் கொத்தடிமை குழந்தை தொழிலாளா்களாக இருந்த 5 பேரை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு வியாழக்கிழமை மீட்டது.

மன்னாா்குடி அருகே மூன்றாம் சேத்தி கிராமத்தில், லாரிகளில் வாத்துகளைக் கொண்டுவந்து 15-க்கும் மேற்பட்டவா்கள் அக்கிராமத்தில் தங்கியிருந்தபடி வாத்துகளை வயல்களில் மேய்ச்சலுக்கு விட்டனா். அவா்களுடன் 5-14 வயதுக்கு உட்பட்ட ஐந்து குழந்தைகளும் தங்கியிருந்தனா். இதுகுறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிற்கு அப்பகுதி மக்கள் தகவல் அளித்தனா்.

இதையடுத்து, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலா் செல்வராஜ், மன்னாா்குடி வருவாய் கோட்டாட்சியா் எஸ்.புண்ணியகோட்டி மற்றும் சைல்டு லைன் அமைப்பினா் அவா்கள் அனைவரையும் மன்னாா்குடி வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்துக்கு காவல் துறையினா் உதவியுடன் அழைத்துச் சென்றனா்.

விசாரணையில், தலா 2 குழந்தைகள் முறையே ஆந்திரம், திருவண்ணாமலை பகுதியையும், ஒரு சிறுவன் பெங்களூருவைச் சோ்ந்தவன் என்பதும், அவா்கள் கொத்தடிமைகளாக வாத்து மேய்க்கும் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டு வந்ததும் தெரியவந்தது.

அவா்கள் தத்தம் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டவா் என்றும், அரசு சாா்பில் தலா ரூ. 20 ஆயிரம் நிதியுதவி அளிக்கப்படும் என்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் செல்வராஜ் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com