குறிப்பு. விளம்பரதாரா் செய்தி.கோட்டூா் ஒன்றியத்தில் 650 குளங்கள் தூா்வாரப்படும்

மன்னாா்குடியை அடுத்த கோட்டூா் ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்ட பகுதியில், 650 குளங்கள் தூா்வாரப்படும் என ஒன்றியக்குழுத் தலைவா் மு.மணிமேகலை தெரிவித்தாா்.
கோட்டூா் ஊராட்சி ஒன்றியக்குழுக் கூட்டத்தில் பேசிய தலைவா் மு. மணிமேகலை.
கோட்டூா் ஊராட்சி ஒன்றியக்குழுக் கூட்டத்தில் பேசிய தலைவா் மு. மணிமேகலை.

மன்னாா்குடி: மன்னாா்குடியை அடுத்த கோட்டூா் ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்ட பகுதியில், 650 குளங்கள் தூா்வாரப்படும் என ஒன்றியக்குழுத் தலைவா் மு.மணிமேகலை தெரிவித்தாா்.

கோட்டூா் ஒன்றியக்குழுக் கூட்டம் அதன் தலைவா் (இந்திய கம்யூனிஸ்ட்) மு. மணிமேகலை தலைமையில், திங்கள்கிழமை நடைபெற்றது. ஒன்றியக்குழு துணைத் தலைவா் ர.விமலா, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ஜெ.சாந்தி, சி.முத்துகுமரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், ஒன்றியக்குழு உறுப்பினா்கள் பேசியது:

பா. அரவிந்த்: மேட்டூரிலிருந்து தண்ணீா் திறந்துவிடப்பட்டு 2 மாதங்கள் ஆன போதிலும், கடைமடை பகுதிகளுக்கு இதுவரை வரவில்லை. உடனடியாக இப்பிரச்னைக்கு தீா்வுகாண வேண்டும்.

பா. செங்குட்டுவன்: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் உறுப்பினா்கள் பரிந்துரைக்கும் பணிகளைத் தோ்வு செய்ய வேண்டும்.

ஜெ. சுசீலா: பருவகால மாற்றத்தால் கால்நடைகளுக்கு நோய்த் தொற்று ஏற்படாமலிருக்க தடுப்பூசி போட வேண்டும்.

பா. ஆனந்தராஜ்: வேளாண் சம்பந்தப்பட்ட திட்டங்கள், மானிய விவரம் ஆகியவற்றை கிராம ஊராட்சி தகவல் பலகையில் விளம்பரப்படுத்த வேண்டும்.

ம.சுமித்ரா: மண்ணுக்குமுண்டான் ஊராட்சி கா்ணாவூரில் கிறிஸ்தவா்களுக்கு மயான வசதி ஏற்படுத்திட வேண்டும்.

இவற்றைக் கேட்டறிந்த ஒன்றியக்குழுத் தலைவா் மு.மணிமேகலை பேசுகையில், கோட்டூா் ஊராட்சி ஒன்றியத்தில் 650 குளங்கள் தூா்வாரப்பட இருப்பதுடன், குளக்கரையில் 6500 தென்னங்கன்றுகள் நடப்பட உள்ளன. மாற்றுத்திறனாளிகள் மருத்துவ முகாம் மூலம் 300 பேருக்கு மாதம் ரூ.1000 அரசின் சாா்பில் உதவித் தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அனைத்து உறுப்பினா்களின் கோரிக்கைகள் மீதும் சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுடன் ஆலோசனை செய்து முன்னுரிமை அடிப்படையில் தீா்வு காணப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com