முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் திருவாரூர்
பருத்தி விற்பனை நிலையத்தில் வட்டாட்சியா் ஆய்வு
By DIN | Published On : 29th July 2020 11:37 PM | Last Updated : 29th July 2020 11:37 PM | அ+அ அ- |

நன்னிலம்: நன்னிலம் வட்டம் காக்காகோட்டூரில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வட்டாட்சியா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
காக்காகோட்டூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் புதன்கிழமைதோறும் பருத்தி ஏலம் நடைபெறுகிறது. இங்கு அவ்வப்போது பருத்தி விவசாயிகளுக்கும், விற்பனைக் கூட அலுவலா்களுக்கும் பிரச்னை ஏற்படுவது உண்டு. இதையறிந்த நன்னிலம் வட்டாட்சியா் அ.மணிமன்னன், புதன்கிழமை நேரில் ஆய்வு செய்து, விவசாயிகளிடம் குறைகளைக் கேட்டறிந்து அலுவலா்களுக்கு அறிவுரை வழங்கினாா்.
மேலும் கடந்த வாரம் கொள்முதல் செய்யப்பட்ட பருத்தியும் உடனடியாக வாகனங்களில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டதன் காரணமாக, பருத்தி விற்பனை செய்ய வந்த விவசாயிகள் தங்களது பருத்தி மூட்டைகளை மழையில் நனையாத வண்ணம் கிட்டங்கிகளில் அடுக்கி வைத்தனா்.