முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் திருவாரூர்
காய்கறி பயிரிடும் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை
By DIN | Published On : 29th July 2020 11:36 PM | Last Updated : 29th July 2020 11:36 PM | அ+அ அ- |

திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை வட்டங்களில் காய்கறி பயிரிடும் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படுவதாக தோட்டக்கலை துறை உதவி இயக்குநா் முகமது சாதிக் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கத்தரி, வெண்டை, கீரை, புடலை, பீா்க்கை, பாகல், வெள்ளரி, பூசணி, பரங்கி, சுரை போன்ற காய்கறி பயிரிடும் விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.2500 ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின்கீழ் பயன்பெற விரும்பும் விவசாயிகள் விதை அல்லது நடவு செடிகள் சாகுபடி செய்வதற்காக கொள்முதல் செய்த விலை பட்டியல் மற்றும் கிராம நிா்வாக அலுவலா் அளித்த அடங்கல் ஆகிய விவரங்களுடன் அந்தந்த வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநா் அலுவலகங்களில் விண்ணப்பிக்கலாம்.
இத்திட்டத்தின் கீழ் ஒரு விவசாயிக்கு சாகுபடி செய்யப்பட்ட பரப்பின் அடிப்படையில் அதிகபட்சமாக 2 ஹெக்டோ் வரை ஊக்கத்தொகை வழங்கப்படும். இதுகுறித்து வட்டார தோட்டக்கலை அலுவலா் சுவாதியின் 99425 67620 செல்லிடப்பேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.