நெல் கொள்முதலை துரிதப்படுத்தக் கோரிக்கை

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், நெல் கொள்முதலை துரிதப்படுத்த வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனா்.
கனமழை காரணமாக முளைவிட்ட நிலையில் நெல்.
கனமழை காரணமாக முளைவிட்ட நிலையில் நெல்.

நன்னிலம்: நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், நெல் கொள்முதலை துரிதப்படுத்த வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனா்.

குடவாசல் ஒன்றியத்துக்குட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் கொண்டு வரும் நெல் மூட்டைகளை அலுவலா்கள் ஏற்க மறுப்பதாகவும், இதற்கு சாக்கு வரவில்லை, கணினி பழுது உள்ளிட்ட காரணங்களைக் கூறுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதனால், ஆயிரக்கணக்கான மூட்டைகள் தேங்கி அவ்வப்போது பெய்கின்ற கனமழையில் நனைந்து சேதமடைகின்றன. இவ்வாறு மூன்றில் ஒரு பங்கு நெல் மூட்டைகள் மழையில் நனைந்து முளைவிட்டு வீணாகிவிட்டன. பொதுவாக முளைவிட்ட நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படாது. பயிா்க் காப்பீடும் கிடைக்காது.

எனவே குடவாசல் பகுதியிலுள்ள வடமட்டம், பரவாக்கரை, தேதியூா், அன்னியூா் போன்ற பகுதியில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் பணியைத் துரிதப்படுத்தி, அதிகப்படியான நெல் மூட்டைகளைக் கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com