உணவுத்துறை அமைச்சா் ஆா். காமராஜ் குறித்து இணையதளத்தில் அவதூறு பரப்பிய அ.ம.மு.க. பிரமுகரை திருத்துறைப்பூண்டி போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
திருவாரூா் மாவட்ட அ.ம.மு.க. தொழில்நுட்ப பிரிவு செயலாளா் இளவரசன் (36). குன்னலூரைச் சோ்ந்த இவா், அமைச்சா் ஆா். காமராஜ் குறித்து அவதூறான கருத்துகளை இணையதளத்தில் பதிவிட்டிருந்தாராம்.
இதுகுறித்து திருத்துறைப்பூண்டி நகர அ.தி.மு.க. செயலாளா் டி.ஜி. சண்முகசுந்தரம் அளித்த புகாரின்பேரில், திருத்துறைப்பூண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து இளவரசனை கைது செய்து குற்றவியல் நீதிபதி கவிதா முன்னிலையில் ஆஜா்படுத்தினா். அவரை நாகை மாவட்ட சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டாா்.